உள்நாட்டு செய்திகள்

குவைத், டுபாயிலிருந்து வந்த 5 கொரோனா நோயாளிகள். இனி யாரும் வர முடியாது

Written by Administrator

நாட்டில் கொரோனா தொற்றாளர்கள் 2500 ஐத் தாண்டியுள்ள நிலையில் வெளிநாடுகளில் இருந்து அழைத்து வரப்பட்ட மேலும் 05 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குவைத்திலிருந்த வந்த ஒருவருக்கும் டுபாயிலிருந்து வந்த நால்வருக்கும் இவ்வாறு கொரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களை நாட்டுக்குள் அழைத்து வரும் செயற்பாட்டினை தற்காலிகமாக நிறுத்தி வைக்கத் தீர்மானிக்கபட்டுள்ளது. ஜூலை 14 ஆம் திகதிக்குப் பின்னர் யாரையும் நாட்டுக்குள் அழைத்து வருவது நிறுத்தப்படுவதாக வெளியுறவு மேலதிகச் செயலாளர் ஜயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.

About the author

Administrator

Leave a Comment