உள்நாட்டு செய்திகள்

தரமற்ற லஞ்ச் சீட் நிறுவனங்களைத் தேடி கம்பஹாவில் சுற்றிவளைப்பு

Written by Administrator

உரிய நியமங்களைப் பேணாமல் லஞ்ச் சீட் தயாரித்த இரு நிறுவனங்களுக்கு எதிராக மத்திய சுற்றாடல் அதிகார சபை வழக்குப் பதிவு செய்துள்ளது.

இந்த விடயத்தில் சட்டத்துக்கு முரணாகச் செயற்படும் மொத்த விற்பனை நிலையங்களும் விநியோகஸ்தர்களும் தொடர்பான தேடுதலை மத்திய சுற்றாடல் அதிகார சபை ஆரம்பித்துள்ளதென களுத்துறை மாவட்ட சபையின் தலைவர் பிரதீப் களுஆரச்சி தெரிவித்துள்ளார்.

அதன்படி நேற்றைய தினம் (11) கம்பஹா, திஹாரிய, கனேமுல்ல, கிரிபத்கொட பிரதேசங்களில் தேடுதல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதன் போது கண்டுபிடிக்கப்பட்ட கனேமுல்லையில் உள்ள 2 லஞ்ச் சீட் தொழிற்சாலைகளுக்கும் 4 மொத்த விற்பனை நிலையங்களுக்கும் எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

About the author

Administrator

Leave a Comment