உலக செய்திகள் சர்வதேசம்

ஹாஜிஆ சோபியா பள்ளிவாயலாக மாற்றும் அர்தூகானின் திட்டம்

Written by Administrator

யுனெஸ்கோ உலக மரபுரிமை மையமாகக் கருதப்படும் ஹாஜிஆ சோபியாவை பள்ளிவாயலாக மாற்றுவதற்கு துருக்கிய மக்களில் பெரும்பாலானவர்கள் ஆதரவளித்துள்ளனர். உயர் நீதிமன்ற தீர்ப்பையடுத்து இக்கட்டத்தை பள்ளிவாயலாக மாற்றும் தீர்மானத்தை பிரதமர் அர்தூகான் எடுத்துள்ளார். ஸ்தன்பூல் நகரிலுள்ள இது ஆறாம் நூற்றாண்டில் பைசாந்தியப் பேரரசினால் நிர்மாணிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

முஸ்லிம்கள் இந்நகரைக் கைப்பற்றியதன் பின்னர் துருக்கிய ஆட்சியின் கீழ் கொண்டுவரப்பட்டது. 1937 ஆம் ஆண்டிலேயே இக்கட்டடம் ஒரு பள்ளிவாசலாகப் பதிவுசெய்யப்பட்டபோதும் உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்படவில்லை. மில்லியன் கணக்கான உல்லாசப் பயணிகளின் கவனத்தை ஈர்க்கும் ஒரு கட்டடமாக ஹாஜிஆ சோபியா இருந்து வருகின்றது.

கொன்ஸ்தாந்து நோபில் நகரமே இன்றைய ஸ்தன்பூல் நகரமாகும். 1453 ஆம் ஆண்டு முஹம்மத் பாதிஹ் இந்நகரத்தை வெற்றி கொண்டதை அடுத்து கிறிஸ்தவ பைசாந்திய பேரரசின் கீழிருந்த ஹாஜிஆ சோபிய முஸ்லிம் ஆட்சியின் கீழ் வந்தது. சுமார் 500 ஆண்டுகளுக்குப் பின்னர் இதனை பள்ளிவாயலாகத் திறக்கும் யோசனையை பிரதமர் அர்தூகான் வெளியிட்டுள்ளார். இதற்கு சில சக்திகள் தமது விமர்சனத்தையும் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

About the author

Administrator

Leave a Comment