Features அரசியல்

அரசியல் யாப்பை சொந்தக் கால்களில் நிற்கவைத்தல்

Written by Administrator
  • விக்டர் ஐவன்

ஜனநாயக அரசியல் முறைமையொன்றின் முக்கிய தூண்களாக சட்டவாக்கம், நிர்வாகம், நீதித்துறை என்பன கருதப்படுகின்றன. சட்டவாக்கம் நாட்டிற்குத் தேவையான சட்டங்களை இயற்றும் அதேநேரம் நிர்வாகத் துறையானது அவற்றினை நடைமுறைப்படுத்தும் நிறுவனமாக செயற்படும். இவ் இரண்டு தூண்களும் அவற்றிற்கு சட்டம் மூலம் கிடைத்துள்ள அதிகாரத்திற்கேற்ப செயற்படுகின்றனவா என்பதனை நீதிமன்றம் காண்காணிக்கும். இந்த மூன்று நிறுவனங்களுக்கும் உள்ள அதிகாரகங்கள் ஒன்று இன்னொன்றையோ இரண்டையோ கட்டுப்படுத்த முடியாதவாறு அமைதல் வேண்டும் என்பது ஜனநாயக முறைமை தொடர்பான கோட்பாட்டாளர்களின் கருத்தாகும்.

ஜனநாயக முறைமையொன்றில் இந்த மூன்று தூண்களுக்குமான அதிகாரம் கிடைக்கப் பெறுவது கடவுள் மூலமன்றி மக்கள் மூலமே கிடைக்கப் பெறுகின்றது. ஜனநாயக ஆட்சிமுறைமையொன்றில் இறைமையின் மூலமாகக் கருதப்படுவது பொதுமக்களே. மக்கள் தமக்குச் சொந்தமான இறைமையை வாக்களிப்பின் மூலம் தெரிவாகும் சட்டவாக்கத்தின் அங்கத்தவர்களுக்கு வழங்குகின்றனர். நிர்வாகம், நீதிமன்றம் என்பவற்றிற்கான அதிகாரத்தினை அவை சட்டவாக்கத்திடமிருந்தே பெறுகின்றன. இறுதியில் இம்மூன்ற அதிகார அமைப்புக்களும் தமக்கான அதிகாரத்தினை மக்களிடமிருந்தே பெறுகின்றன. இந்த அதிகாரத்தினை இந்நிறுவனங்கள் மக்களுடனான அவர்கள் செய்துகொண்ட ஒப்பந்தமான அரசியல் யாப்பின்படியே அவர்கள் பயன்படுத்த வேண்டும். அரசியல் யாப்பினை மீறுவது என்பது பாரிய நம்பிக்கை மீறலாகவும், ஒப்பந்த மீறலாகவும் கருதப்பட வேண்டும்.

யாப்பின் முரண்நகை

இலங்கையில் இம்மூன்று நிறுவனங்களும் கட்டியெழுப்பப்பட்டுள்ள முறைமையில் ஒழுங்கற்ற தன்மை காணப்படுகின்றது போலவே அவை நடைமுறையும் ஜனநாயகத்திற்கும் மக்களின் எதிர்பார்ப்பிற்கும் மாற்றமாகவே இருந்துள்ளது. இவற்றிற்கு ஜனநாயக முறைமை தொடர்பான சரியான முன்னோக்கிய பார்வை காணப்படவில்லை. அவற்றின் செயற்பாடுகளும் ஜனநாயகத்திற்கு விரோதமான தன்னிச்சையான செயற்பாடகவே காணப்பட்டது. தனது குடிமக்களோடு நியாயமாகவும் நடந்துகொள்வதில் தோல்வியுற்றுள்ள இந்நிறுவனங்கள் இன, மத, குல வேறுபாட்டுடன் நடந்துகொண்டமை காரணமாக மக்கள் மத்தியில் வேறுபாடுகள் ஏற்பட்டு நாட்டின் ஒற்றுமையை சீர்குலைப்பதற்குக் காரணமாகவும் இவற்றின் செயற்பாடுகள் அமைந்திருந்தன.

அரசியல் யாப்பை காப்பாற்ற வேண்டிய இவர்கள் தொடர்ந்தேர்ச்சியாக அதனை மீறும் வகையிலேயே நடந்துகொண்டனர். அரசியல் யாப்பு மீறலானது பாரிய பிழை என்ற அரசியல் கலாச்சாரம் இங்கு காணப்படுவதில்லை என்பதோடு அதனை மீறுவதற்கு உரிய தண்டனை வழங்கும் முறைமையும் இங்கு நடைமுறையில் இல்லை. இலங்கையின் அரசியல் முறைமையில் காணப்படும் மிகப்பெரும் தவறு அரசியல் யாப்பின் நடைமுறையைக் காப்பாற்ற வேண்டிய பாதுகாவலராகக் கருதப்படும் நீதிமன்றமானது அவ்விடயம் தொடர்பாக எந்தவித கரிசனையுமின்றி இருப்பதோடு சில சந்தர்ப்பங்களில் அரசியல் யாப்பினை மீறுவதற்குச்    சார்பாக நடந்துகொள்வதோடு சில சந்தர்ப்பங்களில் நீதிமன்றமே அரசியல் யாப்பினை மீறுகின்றது.

அரசாங்கத்தின் சொத்துக்களை காப்பாற்ற வேண்டிய ஜனாதிபதி தனது அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரச உயர் அதிகாரிகளுடன் இணைந்து அவற்றினை கொள்ளையிடும் முறைமை 1978ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகின்றது. ஜனநாயக ஆட்சிமுறைமையொன்றில் அரசியல்வாதிகள் மற்றும் அரச உயர் அதிகாரிகள் அரசாங்கத்துடன் வியாபாரம் செய்வது என்பது அவர்களது பதவி பறிமுதல் செய்யப்பட வேண்டியளவு மிகப்பெரிய குற்றமாகக் கருதப்படும் செயலாகும். இது தொடர்பாக இலங்கையில் கடுமையான சட்டங்கள் காணப்பட்டாலும் அவை நடைமுறைப்படுத்தப்படாத சட்டங்களாகவே இலங்கையில் காணப்படுகின்றது. இவ்விடயமானது இலங்கையின் அனைத்து அரச நிறுவனங்களையும் ஊழல் நிறைந்த நிறுவனங்களாக மாற்றியுள்ளதோடு அரசாங்கத்தின் அனைத்து  நிறுவனங்களும் வங்குரோத்து நிலைக்கும் அடைந்துள்ளமைக்கு முக்கியமான விடயமாகவும் இருக்கின்றது.

அரசியல் யாப்பின் குழப்பம்

அரசியல் யாப்பினை மாற்றுவதற்காக இது வரை முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணைகளில் யாருமே இந்த விடயங்களை கருத்திலெடுத்து முன்வைக்கப்படவில்லை. 19வது அரசியல் யாப்பு சீர்திருத்தத்தில் உருவாக்கப்பட்ட சுயாதீன ஆணைக்குழுக்களின் மூலம் விடயங்கள் அரசியல் மயப்படுவதினை குறைப்பது என்றாலும் கூட குறைந்தளவான மாற்றங்களைக் கூட அவற்றின் மூலம் உருவாக்க முடியவில்லை. இலங்கையின் பாராளுமன்றத்தின் மூலம் கொண்டுவரப்ப்பட்ட எந்தவொரு அரசியல் யாப்பும் திறமையான ஜனநாயக முறையிலான அரசியல் யாப்பாகக் கருத முடியாது. தற்போது காணப்படும் அரசியல் யாப்பும் நாட்டின் ஒற்றுமையைப் பேணும் வகையிலான இனங்களுக்கு மத்தியில் ஒற்றுமையைப் பேணும் வகையிலான யாப்பாகக் கருத முடியாது. யாப்பினை மீறு வதனை இல்லாதொழிப்பதிலும் தோல்வியடைந்துள்ளதோடு மக்கள் பிரதிநிதிகள் பொதுச் சொத்துக்களை அபகரிப்பதனை தடுப்பதில் மற்றும் ஊழலற்ற சிறந்த நல்லாட்சியை ஏற்படுத்துவதிலும் தோல்வியடைந்துள்ளது.

சவாலை வெற்றி கொள்ளல்

இலங்கை அடைந்துள்ள இந்த வீழ்ச்சிக்கு மக்கள் பிரதிநிதிகள் மாத்திரமின்றி அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டவாக்கமும் காரணமாகும். அவர்கள் யாப்பினை மதிக்கவில்லை அதனை மீறினர், அதனை துஷ்பிரயோகம் செய்தனர், அவர்களது பாதுகாக்க வேண்டிய பொதுச் சொத்துக்களை அவர்களே கொள்ளையடித்தனர், எனவே இவ்வாறானவர்களுக்கு புதிய யாப்பு ஒன்றைக் கொண்டு வருவதற்கான எந்தவிதமான தார்மீக உரிமையும் அதற்கான தகுதியும் இல்லை.

எனவே ஆட்சி முறையில் மாற்றத்தை கொண்டு வருவதற்கான முழுமையான அதிகாரம் இறைமையின் உண்மையான அதிகாரத்தைக் கொண்ட பொதுமக்களின் மூலம் கொண்டு வருவதற்கான முறைமையொன்று ஏற்படுத்தப்பட வேண்டும். இங்கு மக்கள் பிரதிநிதிகள் முழுமையாக ஒதுக்கப்படாமல் அவர்களது பங்களிப்பும் காணப்படுவதோடு ஆனால் இதற்கு தலைமை வகிக்கும் பாத்திரம் பொதமக்களிடமே காணப்பட வேண்டும். மீளமைத்தலுக்கான திட்டமிடல் மக்களினதாக காணப்படுவதோடு கொண்டுவரப்படும் புதிய யாப்பும் மக்களது யாப்பாக இருப்பதோடு யாப்பினை உருவாக்கும் முறைமையும் பொதுமக்கள் யாப்பு உருவாக்க முறைமையாகக் காணப்பட வேண்டும்.

சுவிட்சர்லாந்தில் வழங்கப்பட்டுள்ளது போல் Citizen initiative, பொது மக்கள் கருத்துக் கணிப்பு, மீளழைத்தல் போன்ற பொது மக்கள் முன்நிலைப்படுத்தப்பட்ட பொது மக்களின் இறைமையை உறுதிப்படுத்தும் அதன் மூலம் சட்ட உருவாக்கம், அரசியல் யாப்பு என்பவற்றில் பொதுமக்கள் பங்கெடுக்கும் வகையிலான அதிகாரங்கள் யாப் பில் வழங்கப்பட வேண்டும். Citizen initiative என்பது மாற்றத்தைக் கொண்டு வருவதற்காக பொதுமக்களினால் கருத்துக்கள் முன்வைப்பதற்கான அதிகாரமாகும். இது ஒரு புதிய சட்டத்தைக் கொண்டு வருவதற்கான முன்மொழிவாக இருக்க முடியும். அல்லது ஒரு ஊழல் அதிகாரிக்கு எதிரான முன்மொழிவாக இருக்க முடியும். இந்த முன்மொழிவை மக்கள் பிரதிநிதிகள் ஏற்றுக் கொண்டால் அதனை பொதுமக்கள் அத்துடன் நிறுத்திக்கொள்ளலாம். பின்னர் பிரதிநதிகள்   சபை அதனை சட்டமாகக் கொண்டு வர வேண்டும். பிரதிநிதிகள் சபை அதனை ஏற்றுக் கொள்ளாவிட்டால் குறித்த பிரேரணையை விவாதித்து அதற்கான வாக்களிப்பு இடம்பெற வேண்டும். வாக்களிப்பிலும் குறித்த பிரேரணை தோல்வியடைந்தால் அதனை பொதுமக்கள் கருத்துக் கணிப்புக்கு விட வேண்டும்.

மாற்றத்திற்கான கதவைத் திறத்தல்

தற்போதுள்ள இலங்கையின் அரசியல் முறைமையில் பொதுமக்களுக்கு தேர்தலின் போது வாக்களிக்கும் அதிகாரம் மாத்திரமே காணப்படுகின்றது. சட்டவாக்கமோ, நிர்வாக மோ, நீதிமன்றமோ சீர்செய்வதற்கு முயற்சிக்காத ஒரு பெரிய பிழையை சீர்படுத்துவதற்கான அதிகாரம் மக்களுக்கு இல்லை. சட்டம், கொள்கை உருவாக்கம், ஊழல் அதிகாரிக்கு எதிராக ஒரு பிரேரணையை கொண்டு வருவதற்கான அதிகாரத்தை பொது மக்களுக்கு வழங்குவதன் மூலம் பொதுமக்களையும் ஆட்சியின் பங்காளர்களாக மாற்றலாம். இதன் மூலம் அராங்கமானது பொதுமக்களின் பலமான கண்காணிப்புக்குட்பட்ட ஊழலற்ற மக்களுக்கு நன்மை தரக்கூடிய திறமையான அரசாங்கமொன்றை நாட்டில் ஏற்படுத்தலாம்.

அரசியல் யாப்பினை மீறும் செயற்பாடானது குறித்த அதிகாரியின் பதவியைப் பறிக்கும் வகையிலான குற்றமொன்றாக மாற்றும் வகையிலான சட்டம் கொண்டுவரப்பட வேண்டும். இந்நிலைமையானது உயர் பதவியிலிருக்கும் நீதிபதிகளுக்கும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

அனைத்து வகையான குல வேறுபாடுகளையும் நீக்கும் வகையிலான சட்டங்கள் யாப்பில் உள்ளடக்கப்பட வேண்டும். இலங்கை மக்கள் தொடர்பாக தெளிவான விளக்கம் யாப்பில் உள்ளடக்கப்பட வேண்டும். இன, மத, குல வேறுபாடுகளுடனா செயற்பாடானது அரசியல் யாப்பு மீறலாகக் கருதப்படுவதோடு அதற்கான தண்டனையாக அரசியல் யாப்பு மீறலுக்கான தண்டனை வழங்கப்பட வேண்டும்.

சட்ட உருவாக்கம், அரசாங்க கொள்கை உருவாக்கம் என்பவற்றில் பொது மக்களையும் பங்குபற்ற வைப்பதனால் நாட்டின் ஆட்சி முறையில் புரட்சகரமான மாற்றமொன்றைக் கொண்டுவர முடியும். தற்போதுள்ள முறைமையில் பிழைகளை திருத்தப்படுவதில்லை, பாராளுமன்ற உறுப்பினர்கள் சட்டவிரோதமாக அரசாங்கத்துடன் வியாபாரம் செய்தனர், ஊழல் நிறைந்த ஜனாதிபதகள் இருந்தனர், நீதியரசர் சரத் என்.சில்வா நீதிமன்றத்தையே துஷ்பிரயோகம் செய்தார் ஆனால் அவர் இன்று ஓய்வின் பின்னர் சாதாரணமாக வாழ்ந்து வருகின்றார். இந்த பிழையான சக்கரத்தை பொது மக்கள் பங்குபற்றல் மூலமாக மாத்திரமே மாற்ற முடியும்.

இறுதியாக

பொதுமக்கள் முன்நிலையான ஆட்சி முறைமையொன்றின் மூலம் ஆட்சி முறைமையை சூழ்ந்துள்ள ஊழல், உற்பத்தித் திறன், வேறுபாடுகள் என்பவற்றை இல்லாதொழிக்க முடியும். இன, மத, குல வேறுபாடுகளை மக்களின் உரிமை மீறப்படல் என்பன கடந்த காலத்திற்கே மாத்திரமான நிகழ்வுகளாக மாற்ற முடியும். குரல் கற்ற அனைத்து மக்களுக்கும் தமது குரல்களை மேலோங்கத் செய்வதற்கான வாய்ப்பு வழங்கப்படும். கல்வி, சுகாதாரம், போக்குவரத்து, சுற்றாடல், சக்தி வளம். வியாபாரம், சிறு உற்பத்திகள், மீன்பிடி, வணிகம், விவசாயம், தொடர்பாக புதிய பிரரேணைகள் கொண்டு வந்து அவற்றினை சட்டமாக்கி அதன் மூலம் பிரதிபலனை பொதுமக்களுக்கு பெற்றுக்கொள்ள முடியும். சம்பளம் மற்றும் ஏனைய உரிமைகளைப் பெற்றுக்கொள்வதற்காக வேலை நிறுத்தம் மேற்கொள்ள வேண்டியதில்லை பொது மக்களே அவர்களது பிரச்சினைகளுக்கான தீர்வுகளை வழங்குபவர்களாகவும் காணப்படுவர்.

இவை கனவுகள் அன்று நிஜமாக கொண்டுவர முடியுமான விடயங்களாகும். பாரிய வீழ்ச்சியை எதிர்கொண்டுள்ள இலங்கையானது அதலிருந்து மீள்வதற்குள்ள ஒரே வழி அனைவருக்கும் உரிமைகளை வழங்கக்கூடிய பொது மக்களுக்கு அதிகாரத்தை வழங்கக் கூடிய பொதுமக்கள் யாப்பு ஒன்றிற்கான கதவை திறப்பதன் மூலமே. இது புதிதாக நடைமுறைப்படுத்திப் பார்க்கப்படக் கூடிய ஒரு புதிய விடயமன்று இலங்கை போன்ற பிரச்சினைகளை எதிர்கொண்ட நாடுகள் நடைமுறைப்படுத்தி வெற்றியடைந்த ஒரு வெற்றிகரமான முறைமையாகும்.

About the author

Administrator

Leave a Comment