உலக செய்திகள் சர்வதேசம்

ஈரானில் அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் ஆர்ப்பாட்டம்

Written by Administrator

ஈரானில் கொரோனாவைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகள் மற்றும் வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுமாறு கோரி முக்கிய நகரங்களில் மக்கள் கடந்த ஒரு வாரமாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பொலிஸார் மக்களைக் கலைப்பதற்குக் கையாண்டு வரும் பதில் நடவடிக்கைகள் கடும் விமர்சனத்தை எழுப்பி வருகின்றது.

கண்ணீர்ப் புகை மற்றும் நீர்த் தாரை மூலம் மக்கள் கலைக்கப்படுவதாக அரச படையினர் கூறுகின்றபோதும், சில இடங்களில் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்படுவதாக மனித உரிமை நிறுவனங்கள் குற்றம் சாட்டியுள்ளன.

கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் இதுபோன்ற ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்ற போது அரசாங்கம் அவற்றை கடுமையாக அடக்கியது. நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தனர். ஈரான் அரச படையுடன் சேர்த்து சுமார் 225 பேர் அதன்போது கொல்லப்பட்டதாக தெஹ்ரான் அரசாங்கம் அறிவித்தது. ஆனால், அப்போது கொல்லப்பட்டோர் தொகை 364 என சர்வதேச மன்னிப்புச் சபை சுட்டிக்காட்டியது.

தற்போது அதேபோன்ற நிலைமை அங்கு உருவாகியுள்ளதாக மனித உரிமை நிறுவனங்கள் சுட்டிக் காட்டியுள்ளன.

About the author

Administrator

Leave a Comment