முகக் கவசம் கட்டாயமில்லை

9
  • அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்

உலகில் மிக அதிக கொரோனா தொற்றாளர்களைக் கொண்டுள்ள அமெரிக்காவில் இதுவரை சுமார் ஒன்றரை இலட்சம் மக்கள் கொரோனாவினால் இறந்துள்ளனர். தொடர்ந்தும் கொரோனா வேகமாகப் பரவி வரும் நாடாக அமெரிக்காவே இனங்காணப்பட்டுள்ளது.

இந்நிலையில் மாநில கவர்னர்கள்,  சுகாதாரத் துறை ஆலோசனையோடு தத்தமது மாநிலங்களில் முகக் கவசம் அணிவது கட்டாயம் என்ற சட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளனர். தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் அமெரிக்காவில் மாநிலங்கள் அறிமுகம் செய்யும் முகக் கவசம் தொடர்பான சட்டம் தேசிய ரீதியாக அங்கீகரிக்கப்பட மாட்டாது என்றும் முகக் கவசம் கட்டாயம் இல்லை என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சுகாதாரக் கட்டுப்பாடுகளைத் தளர்த்துமாறு தொடர்ந்தும் மாநில கவர்னர்களை வலியுறுத்தி வரும் அவர், பாடசாலைகளைத் திறக்குமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார். ட்ரம்பின் இந்த நிலைப்பாடுகள் அமெரிக்காவில் கடும் விமர்சனத்தை எழுப்பி வருகின்றன.