நைஜீரியாவில் ஒரு துப்பாக்கிக்கு இரண்டு மாடுகள்

20

மேற்கு ஆபிரிக்க முஸ்லிம் பெரும்பான்மை நாடாகிய நைஜீரியாவில் போக்கோ ஹராம் எனப்படும் ஆயுதக் கிளர்ச்சிக் குழு மத்திய அரசுக்கு எதிராக போராடி வரும் நிலையில், கோத்திர சண்டைகளும் சில மாநிலங்களில் தலைதூக்கியுள்ளால் அரசுக்கு பெரும் நெருக்கடி தோன்றியுள்ளது.

இந்நிலையைத் தணிப்பதற்கு அரசாங்கம் புதிய திட்டமொன்றை அறிவித்துள்ளது. ஆயுதம் தாங்கியுள்ள கோத்திரத் தலைவர்கள் தமது துப்பாக்கியை அரசிடம் ஒப்படைத்தால் இரண்டு சலுகைகள் அவர்களுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆயுதங்களை ஒப்படைப்பவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கப்படும் அதேவேளை, ஒப்படைக்கப்படும் ஒவ்வொரு துப்பாக்கிக்கும் இரண்டு மாடுகள் சன்மானமாக வழங்கப்படும் என நைஜீரிய அரசாங்கம் அறிவித்துள்ளது.

70 வீதம் முஸ்லிம்களைக் கொண்ட இந்நாட்டில் 30 வீதம் கிறிஸ்தவர்களும் வாழ்கின்றனர். உலகின் சக்திவாய்ந்த பயங்கரவாத இயக்கங்களில் ஒன்றான போக்கோஹராம் பல்வேறு மாநிலங்களில் அரச படைக்கு அச்சுறுத்தலாக இருந்து வருவதனால் நைஜீரியாவின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து கடும் பணவீக்கம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.