Features அரசியல்

பாராளுமன்றத் தேர்தல்

Written by Administrator

கொரோனாவினால் நாட்டில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலையானது இன்னும் தனிந்த பாடில்லை. இரண்டாவது அலை தொடர்பான அச்சத்திற்கு மத்தியில் பாராளுமன்றத் தேர்தலை நடாத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலமையானது தேர்தல் தொடர்பான மக்களின் ஆர்வத்தைக் குறைத்துள்ளது என்றாலும், இத்தேர்தலானது ஆளும் கட்சியினதும் எதிர்க்கட்சியினதும் பலத்தை உரசிப் பார்க்கும் ஒரு அளவுகோளாகப் பார்க்கப்படும் நிலையே காணப்படுகின்றது.

ஆளும் கட்சி தேர்தலில் வெற்றியடைந்தாலும் அது ஒரு பாரிய வெற்றியாக அமையாத சந்தர்ப்பத்தில் அவ்விடயமானது ஆளும் கட்சியினது பலத்தைக் குறைக்கும் விடயமாகவே அமையும். ஜனாதிபதித் தேர்தலில்  69 இலட்சம் வாக்குகளைப் பெற்றுக் கொண்டாலும் இத்தேர்தலில் எத்தனை வாக்குகளை ஆளும் கட்சி பெறும்?

ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் ஆளும் கட்சியினுள் இரண்டு அதிகாரப் மையங்களைக் காணக்கூடியதாகவுள்ளது. இதில் ஒரு அதிகார மையமாக ஜனாதிபதி செயற்படு கின்ற அதே சந்தர்ப்பத்தில் அடுத்த அதிகார மையமாக ஜனாதிபதியின் சகோதரர் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ காணப்படுகின்றார். இரண்டு பேருக்குமே ஆதரவாளர்கள் காணப்படுகின்றனர். ஜனாதிபதியின் ஆதரவாளர்கள் ஜனாதிபதியை ஒரு தூய முற்போக்குடையவராகவே பார்க்கின்றனர். ஆனால் அவர்கள் பிரதமர் அவர்களை தூய்மையற்ற பிற்போக்குடையவராகவே பார்க்கின்றனர். இவர்கள் இருவருக்குமிடையில் பிரச்சினைகள் இல்லை என்று எடுத்துக் கொண்டாலும் கூட அவர்களது நிலைப்பாடுகளில் வித்தியாசங்கள் காணப்படுகின்றன.

தேர்தலின் பின்னர் இந்த அண்ணன் தம்பி இருவரதும் அதிகாரங்களில் மாற்றங்கள் ஏற்படலாம். இதுவரை அரச நிர்வாகத்தின் தலைவராக ஜனாதிபதியே செயற்பட்டார். ஏற்கனவே நினைத்தது போலவே வியத்மக குழுவினருக்கு மகிந்தவின் குழுவினரை விஞ்சி அதிகாரத்தைக் கைப்பற்ற முடியவில்லை. 19ம் யாப்புத் திருத்தத்தின் பின்னர் அரச அதிகாரத்தின் மையமாகத் திகழ்பவர் ஜனாதிபதியன்று பிரதமரே. ஜனாதிபதி பிரதமரை முன்னணியாகக் கொண்ட அமைச்சரவையின் முடிவுகளையே நடைமுறைப்படுத்த வேண்டும். அமைச்சரவையில் முடிவெடுக்கும் அதிகாரம் ஜனாதிபதியன்றி பிரதமருக்கே காணப்படுகின்றது. இந்நிலையானது சில சந்தர்ப்பங்களில் பிரச்சினைக்குரிய சூழலை ஏற்படுத்த முடியும்.

எதிர்க்கட்சி

பிரதான எதிர்க்கட்சியான ஐ.தே.கட்சியானது இரண்டாகப் பிளவடைந்துள்ளது. ஜனாதிபதித் தேர்தலில் அடைந்த பாரிய தோல்வியின் பின்னர் கட்சியின் ஒற்றுமையைக் காப்பாற்றி கட்சி பிளவு அடையாமல் இருந்திருப்பின் இத்தேர்தலில் பலமான எதிர்க்கட்சியாகப் போட்டியிட்டிருந்திருக்க முடியும். ஆனால் கட்சியில் இந்நிலைமையை ஏற்படுத்துவதற்கு பழைய தலைவர் மற்றும் புதிய தலைவர் இருவருமே தவறியுள்ளனர். இதற்கான விலையை தலைவர்கள் இருவர் மாத்திரமன்றி கட்சியும் கொடுக்க வேண்டிய நிலை தவிர்க்க முடியாததாகும்.

இத்தேர்தலானது ஜே.வி.பி.யினருக்கும் முக்கியமானதாகும். ஏற்றுக்கொள்ளத்தக்க முடிவுகளைக் இவர்கள் அடையவில்லையாயின் இவர்களுக்கும் சம்பிரதாய இடதுசாரிக் கட்சிகளுக்கு ஏற்பட்ட நிலைமையே ஏற்படும். ஏனைய கட்சிகளுடன் ஒப்பிடும்போது இவர்கள் ஊழல் குற்றச்சாட்டுக் களற்றவர்களாகக் காணப்பட்டாலும் பாராளுமன்ற அரசியலில் இவர்கள் முற்போக்கான புத்தாக்கமான மாற்றங்கள் இவர்களால் ஏற்படுத்தப்படவில்லை. குறைந்தபட்சம் பாராளுமன்றம் அடைந்துள்ள இந்த மோசமான நிலைமையை மாற்றும் வகையிலான பயன் மிக்க செயற்பாடுகளை முன்னெடுக்க இவர்களால் முடியவில்லை.

தேர்தலில் எத்தனை ஆசனங்கள் பெற்றாலும் சிறுபான்மைக் கட்சிகளான தமிழ், முஸ்லிம், மலையகக் கட்சிகள் தாம் எந்தப் பாதையைத் தேர்ந்தெடுப்பது என்ற விடயத்தில் குழப்பத்திலேயே உள்ளனர்.

அரசியல் யாப்புடன் விளையாடுதல்

இந்தப் போட்டியில் ஆளும் கட்சி எந்தத் முடிவைப் பெற்றாலும் தேர்தலின் பின்னர் பாராளுமன்ற உறுப்பினர்களை தமது பக்கத்திற்கு சேர்த்துக் கொண்டு; மூன்றிலிரண்டு பெரும்பான்மையைப் பெற்றுக்கொள்ளும் நிலைப்பாட்டிலேயே அவர்கள் உள்ளனர். இந்நிலைப்பாடானது யாப்புக்கு முரணானதாகும்.

பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தை இழக்காது கட்சிமாற முடியாது என்பது இரண்டாவது குடியரசு யாப்பில் ஜனாதிபதி ஆட்சி முறைமைக்கான தெளிவாக ஏற்படுத்தப்பட்டுள்ள ஒரு விடயமாகும். தேர்தலில் பெற்ற பெரும்பான்மையை இழக்காது அடுத்த தேர்தல் வரை ஆட்சியை முன்னெடுப்பதற்காகவே இம்முறைமை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ரணசிங்க பிரேமதாஸ ஜனாதிபதி அவர்களுக்கு நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட்ட சந்தர்ப்பத்தில் அதனுடன் தொடர்பான 8 உறுப்பினர்கள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர். நீக்கப்பட்ட 8 பேரும் தமது உறுப்புரைமையைத் தக்கவைத்துக் கொள்வதற்காக நீதிமன்றத்தை நாடிய சந்தர்ப்பத்தில் மார்க் பெர்ணாண்டே உட்பட 3 பேரைக் கொண்ட நீதிபதிகளின் குழாம் அந்த 8 பேரினதும் பாராளுமன்ற உறுப்புரிமையை இரத்துச் செய்தது.

ஜனாதிபதி சந்திரிக்காவின் இரண்டாவது ஆட்சிக் காலப்பகுதியில் நீதிமன்றத்தினதும் ஆதரவுடன் ஐ.தே.கட்சியைச் சேர்ந்தவர்களை தமது பக்கம் இழுத்து அவர்களது உறுப்புரிமையையும் பாதுகாத்துக் கொடுக் கும் நிலைமை ஏற்படுத்தப்பட்டது. இந்த யாப்புக்கு முரணான செயற்பாட்டின் ஒரு சந்தர்ப்பத்தில் முஸ்லிம் காங்கிரஸுடன் தொடர்பான நுஆ கட்சியின் உறுப்பினர் ஒருவர் தொடர்பாக (அமீர்அலி) நீதியரசர் சரத் என்.சில்வா அவர்களால் அபூர்வமான தீர்ப்பு ஒன்று வழங்கப்பட்டது. அதாவது கட்சித் தாவலின்போது மக்களுக்கு கிடைக்கும் நன்மை தொடர்பாக நீதிமன்றம் கருத்திற் கொள்ள வேண்டும் என்று அத்தீர்ப்பில் கூறப்பட்டது. ஆளும் கட்சியினரிடமிருந்து ஒரு பெரும் தொகையைப் பெற்றுக்கொண்டு கட்சி மாறும் சந்தர்ப்பத்தில் அவர்களது உறுப்புரிமையைப் பாதுகாக்கும் வகையில் நீதிமன்றம் செயற்படுவதானது யாப்பைப் பாதுகாக்க வேண்டிய நீதிமன்றமே யாப்பை மீறும் வகையில் செயற்படும் மிகப்பாரிய பிழையான செயற்பாடொன்றாகும். இச்செயற்பாடானது யாப்பில் ஒரு முரண்பாட்டு நிலைமையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலைமயானது பாராளுமன்ற உறுப்பினர்கள் காசுக்காக விடிபோகும் நிலைமையை ஏற்படுத்தியதுடன் சில இவ்வாறான கட்சிமாறல் சந்தர்ப்பங்களில் பாராளுமன்ற உறுப்பினர்கள் 100 மில்லியன் அளவில் விலைபோகும் நிலைமையையும் ஏற்படுத்தியது.

அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு

2018ம் ஆண்டு பிரதமர் பதவியிலிருந்து ரணில் விக்கரமசிங்க அவர்களை நீக்கிவிட்டு மகிந்த ராஜபக்ஷ அவர்களைப் பிரதமராக ஜனாதிபதி மைத்ரி அவர்கள் நியமித்த சந்தர்ப்பத்தில் அரசாங்கத்தால் பெரும்பான்மையை பாராளுமன்றத்தில் பெற்றுக்கொள்வதற்கு பாராளுமன்ற உறுப்பினர்களை தமது பக்கத்திற்கு எடுப்பதற்கு முடியாமல் போனமைக்கான காரணம் அவர்களால் கேட்கப்பட்ட தொகையை வழங்க முடியால் போனமைதான் என்று ஜனாதிபதி பகிரங்கமாகவே குறிப்பிட்டிருந்தார். இலங்கையில் அரசாங்கம் மட்டுமன்றி ஆட்சியாளர்களும் எந்தளவு படுமோசாமன நிலைமையை அடைந்துள்ளனர் என்பதனை இச்சம்பவத்தின் மூலம் சிறந்த முறையில் புரிந்துகொள்ள முடியுமாகவுள்ளது.

தேர்தலின் பின்னர் மூன்றில் இரண்டை அடைந்துகொள்வதற்கு ஆதரவளிப்பதற்காக சில எதிர்கட்சி உறுப்பினர்கள் தற்போதே வாக்களித்துள்ளார்கள் என்பதாக ஜனாதிபதியே பல சந்தர்ப்பங்களில் கூறியுள்ளார். இந்தச் செயற்பாடானது யாப்புக்கு முரணானது என்பது ஜனாதிபதிக்குத் தெரியாதா? நாட்டில் ஜனாதிபதிகள் ஆட்சிக்கு வரும் சந்தர்ப்பங்களில் அவர்களுக்குத் தேவையான வகையில் யாப்பை மீறுவது காரணமாக நாடு குழப்ப நிலையை அடைவதற்கான முக்கியமான காரணிகளில் ஒன்றாகும். அரசின் தலைவர் யாப்பைக் காக்க வேண்டிய நீதிமன்றம் என்பனவே யாப்பை மீறுபவர்களாக இருக்கின்றபோது நாடு இவ்வாறான மோசமான நிலையை அடைவது என்பது புதுமையான விடயமொன்றல்ல.

மூன்றில் இரண்டு என்பது அடைந்து கொள்ள முடியாததொரு கனவு மாத்திரமே. அந்தக் கனவை அடைந்துகொண்டாலும் கூட நாடு இப்போது இருக்கும் சமூக பொருளாதார அரசியல் சூழ்நிலையில் வெற்றிகரமான ஆட்சியொன்றை எடுத்துச் செல்வதில் பாரிய சிரமங்கள் காணப்படுகின்றன.

இறுதியாக

நாட்டின் பொருளாதாரமானது மீளக் கட்டியெழுப்ப முடியாத வகையிலான பாரிய வீழ்ச்சியை நோக்கிச் செல்கின்ற நிலையிலேயே உள்ளது. உலக வங்கியின் கணிப்பின் படி இலங்கையின் பொருளாதார வீழ்ச்சி அடையும் எனக் குறிப்பிட்டுள்ளது. அந்நியச் செலாவணி வருமானத்தில் பாரிய வீழ்ச்சியை அடைந்துள்ள அதேநேரம், நாட்டின் அன்றாடச் செலவுகளை மேற்கொள்வதற்கும் அரச கடன் மற்றும் வட்டியை மீளச் செலுத்துவதற்கும் இயலாத நிலையிலேயே அரசாங்கம் தற்போது உள்ளது. கிட்டிய சந்தர்ப்பத்தில் வங்குரோத்த நிலையை அடையும் நிலையிலேயே நாடு உள்ளது.

இலங்கைக்கு ஏற்பட்டிருக்கும் இந்நிலமையை சுருக்கமாக பின்வருமாறு விபரிக்க முடியும். இலங்கையின் இந்த ஆட்சி முறைமையானது பிரித்தானியரிடமிருந்து எமக்குக் கிடைக்கப் பெற்றதாகும். சுதந்திரம் கிடைக்கப் பெற்ற சந்தர்ப்பத்தில் அச்சந்தர்ப்பத்திற்குத் தேவையான மாதிரியான மாற்றங்கள் இதில் மேற்கொள்ளப்படவில்லை. சுதந்திரத்தின் பின்னர் தேசிய ஒற்றுமையை வலுப்படுத்தும் வகையிலான விடயங்கள் உரிய வகையில் முன்னெடுக்கப்படவில்லை. சுதந்திரத்தின் பின்னர் ஆட்சிக்கு வந்தவர்கள் இன, மத, குல அடிப்படையில் செயற்பட்டதன் காரணமாக நாட்டில் குழப்பங்கள், போராட்டங்கள், யுத்தங்கள் என்பன ஏற்பட்டு அதன் காரணமாக யாப்பை மதிக்காது ஆட்சி செய்யும் சூழ் நிலையொன்று நாட்டில் ஏற்பட்டது. 1978 இன் பின்னர் அரசாங்க சொத்துக்களைக் களவாடுவது என்பது அரசாங்கத்தின் நிரந்தரக் கொள்கையாக மாறி மொத்த அரசாங்கம் மற்றும் அரச நிறுவனங்கள் ஊழல் நிறைந்த நிறுவனங்களாக மாற்றமடைந்தது. இந்நிலையை மாற்றுவதற்கான உரிய செயற்பாடுகள் மேற்கொள்ளப்படாமை காரணமாக நாடு முழுமையாக வீழ்ச்சியடையும் நிலையை அடைந்துள்ளது. பழைய கட்சிகள் மற்றும் தலைவர்களுக்கான ஆதரவு வீழ்ச்சியடைந்து செல்வதும் வரலாற்றில் அவர்கள் விட்ட இவ்வாறான தவறுகளின் காரணமாகவேயாகும்.

இந்த வீழ்ச்சியிலிருந்து மீள்வதற்குள்ள ஒரே தீர்வு முழுமையான முறைமை மாற்றம் ஒன்றை மேற்கொள்வதாகும். அதனை மக்கள் யாப்பு மாற்றம் ஒன்றின் மூலமே மேற்கொள்ள முடியும்.

About the author

Administrator

Leave a Comment