நாட்டில் தீவிரவாதம் வன்முறைக்கு இட்டுச் சென்றிருக்கிறது. 256 பேரின் உயிரைப் பலியெடுத்திருக்கிறது. தீவிரவாதத்துக்கு எதிராகப் போராடுவதற்கு அரசாங்கத்துக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவைப்படுகிறது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தவிசாளர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் கட்சியின் தலைமையகத்தில் தெரிவித்தார்.
ஈஸ்டர் தாக்குதலுக்கான உண்மையான காரணம் இதுவரை தெரியவரவில்லை. ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஷ நியமித்த குழுவினர் அதற்காக இரவுபகலாக உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். விரைவில் அவர்கள் அறிக்கையை வெளியிடுவார்கள் எனத் தெரிவித்தார்.
எதிர்காலத்தில் இவ்வாறான தாக்குதல்கள் நடைபெறாமல் இருப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கிறது. அதற்காக அரசாங்கத்துக்கு பாராளுமன்றத்தில் உறுதியான பெரும்பான்மை தேவைப்படுகிறது எனவும் அவர் தெரிவித்தார். (எஸ்)