அமெரிக்காவில் கொரோனா தொற்றும் மரணங்களும் அதிகரித்தமைக்கு யார் காரணம்

25

உலகில் 200 இற்கு மேற்பட்ட நாடுகள் கொரோனா தொற்றின் பாதிப்புக்கு உட்பட்டுள்ளன. அவற்றுள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட முதலாவது நாடாக அமெரிக்காவே இருந்து வருகின்றது. 45 இலட்சம் பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியிருப்பதோடு, 146,000 பேர் இதுவரை மரணித்துள்ளனர்.

இத்தாலி, ஸ்பெய்ன் ஆகிய நாடுகளை ஏப்ரல் மாதத்திலேயே தோற்கடித்த அமெரிக்காவில் நாளொன்றுக்கு ஆகக் குறைந்தது 25,000 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்படுகின்றனர். அதேவேளை, நாளொன்றுக்கு ஆகக் குறைந்தது சுமார் 1000 மரணங்கள் அங்கு பதிவாகி வருகின்றன. கொரோனா தொற்றின் உச்சநிலை பல மாதங்களாக நீடித்து வருவது அமெரிக்காவின் சுகாதாரத் துறை குறித்து பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

சமீபத்தில் அல் ஜஸீராவின் செய்திப் பகுப்பாய்வாளர் மஹ்தி ஹஸன் இது குறித்து விவாதமொன்றை நடத்தினார். அமெரிக்கக் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்களும் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த பிரமுகர்களும் இந்த விவாதத்தில் கலந்து கொண்டனர்.

உலகிலேயே முன்னேற்றகரமான மருந்தாக்கத் தொழில்நுட்பம் மற்றும் மருத்துவத் தொழில்நுட்பம் என்பவற்றிலும் மருத்துவ ஆய்வுகளிலும் முன்னணியில் உள்ள ஒரு நாட்டில் கொரோனா தொற்று பல மாதங்களாக தீவிரமாகப் பரவி வருவதற்கு பொறுப்புக் கூற வேண்டியவர்கள் யார் என்பதே இந்த விவாதத்தின் மையப் பொருளாக இருந்தது.

ட்ரம்பிற்கு எதிராக கடும் விமர்சனங்களை விவாதத்தில் கலந்துகொண்டோர் முன்வைத்தனர்.