புவனேகபாகு அரசவை புனர்நிர்மாணப் பணிக்கு இராணுவம் அழைப்பு

11

குருநாகல் மேயரினால் உடைப்பதற்கு அனுமதியளிக்கப்பட்ட தொல்பொருள் கட்டடத்தை மீள நிர்மாணிக்கும் பணியில் இணைந்து கொள்ளுமாறு பாதுகாப்பு அமைச்சு இராணுவத்தைக் கோரியுள்ளது. இது தொடர்பிலான கடிதத்தின் பிரதி தமக்குக் கிடைத்துள்ளதாக புத்தசாசன கலாசார மற்றும் மதவிவகார அமைச்சின் செயலாளர் பந்துல ஹரிஸ்சந்திர தெரிவித்துள்ளார்.

இதேவேளை தொல்பொருட்களுடன் நடந்து கொள்ள வேண்டிய விதம் பற்றி மக்களைத் தெளிவூட்டுவதற்கான வேலைத் திட்டமொன்றும் புத்தசாசன கலாசார மற்றும் மதவிவகார அமைச்சினால் முன்னெடுக்கப்படவுள்ளது.

தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள தொல்பொருள் பெறுமதிமிக்க பகுதிகளை அண்டி வாழும் மக்களும் நிறுவனங்களும் இதில் தொடர்புபடுத்தப்படவுள்ளதாக அமைச்சின் செயலாளர் தெரிவித்தார். எதிர்வரும் பொதுத் தேர்தலின் பின்னர் இதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும்.