உள்நாட்டு செய்திகள்

உலகின் மிகக் கடுமையான சுகாதார அவசர நிலையாக கொவிட் 19 பிரகடனம்

Written by Administrator

உலக சுகாதார அமைப்பினால் இதுவரை காலமும் பிரகடனம் செய்யப்பட்ட மிகக் கடுமையான சுகாதார அவசர நிலையாக கொவிட் 19 இருப்பதாக அமைப்பின் தலைவர் டொக்டர் டெட்ரோஸ் அதனோம் கெப்ரியேசுஸ் தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் எபோலா (இரண்டு முறை), ஸிகா, போலியோ, பன்றிக் காய்ச்சல் நோய்த் தொற்றுக்களின் போது ஐந்து தடவைகள் அவசரகால நிலை பிறப்பிக்கப்பட்டது. இவை அனைத்தையும் விட இது பாரதூரமானது என அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஜனவரியில் இருந்து இதுவரை உலகில் ஒரு கோடி அறுபது இலட்சத்துக்கும் மேற்பட்டோர் தொற்றுக்கு உள்ளாகியிருப்பதோடு 650,000 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இன்னும் இந்த நோய்த் தொற்றின் அபாயத்திலிருந்து உலகம் மீளவில்லை. “ஜனவரி 30 ஆம் திகதி சர்வதேச அளவில் பொது சுகாதார அவசர நிலை ஒன்றை நான் பிரகடனம் செய்யும்போது, சீனாவுக்கு வெளியில் 100க்கும் குறைவான வைரஸ் தொற்றே இருந்ததோடு எந்த உயிரிழப்பும் பதிவாகி இருக்கவில்லை” என்று டெட்ரோஸ் தெரிவித்தார்.

“கொவிட்–19 எமது உலகை மாற்றிவிட்டது. அது மக்கள், சமூகங்கள் மற்றும் தேசங்களை ஒன்றிணைத்ததோடு அவர்களை தனிமைப்படுத்தியது” என்றும் அவர் குறிப்பிட்டார்.இந்த வைரஸுக்கு எதிராக போராட உலகம் கடும் முயற்சி எடுக்க வேண்டும் என்றும் எம்முன்னால் நீண்ட பயணம் ஒன்று உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

About the author

Administrator

Leave a Comment