உள்நாட்டு செய்திகள்

சீன கம்யூனிஸ்ட் கட்சியும் இந்திய பிஜேபியுமே எமது அரசியல் முன்மாதிரிகள்

Written by Administrator

எமது கட்சி சீன கம்யூனிஸ்ட் கட்சி (CCP)  போல இருக்க வேண்டும், செயற்பட வேண்டும் என நான் விரும்புகிறேன். இந்தக் கட்சி பொறுப்புடன் செயற்படுகின்றது. இந்திய பிஜேபியைப் போலவும் நாங்கள் இருக்க விரும்புகிறோம். உலகின் அரசியல் கட்சிகள் பலவற்றையும் நாங்கள் படித்திருக்கிறோம். அவற்றில் சீன கம்யூனிஸ்ட் கட்சியும் இந்திய பிஜேபியுமே சிறப்பானவை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய ஒழுங்கமைப்பாளர் பசில் ராஜபக்ஷ டெய்லி எப்டிக்கு வழங்கிய பேட்டியில் தெரிவித்துள்ளார்.

அதிர்ஷ்டவசமாகவோ துரதிர்ஷ்டவசமாகவோ மக்கள் சிலவேளைகளில் ராஜபக்ஷாக்களைத் தெரிவு செய்கிறார்கள். நல்லதில்லை என்றால் மக்கள் தெரிவு செய்ய மாட்டார்கள். 2015 இல் இது நடந்தது. எங்களை நாங்கள் மாற்றிக் கொண்டு மீண்டும் வந்திருக்கிறோம். அனைத்து ராஜபக்ஷ வேட்பாளர்களையும் மக்கள் இம்முறை தெரிவு செய்வார்கள். ஆனால் மூன்றில் இரண்டு பெரும்பான்மை எடுப்பது தொடர்பில் நான் இன்னும் திருப்தியான நிலையில் இல்லை. ஏனெனில் அது பாரிய இலக்கு எனவும் அவர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்துக்குச் செல்லாமல் அரசியலில் எப்படி இருக்க வேண்டும் என்பதில் நான் 2015 முதல் மாற்று வழிகளைக் கண்டேன். இன்னும் சிலரும் இப்போது இதைச் செய்வதை நான் காண்கிறேன். பாராளுமன்றத்துக்குச் செல்லாமல் நான் ஆரம்பித்த போக்கு இது. நான் ஒரு அரசியல் கட்சியை உருவாக்கியுள்ளேன். அது இரண்டு தேர்தல்களில் வெற்றி பெற்றிருக்கிறது. இப்பொழுது மூன்றாவது தேர்தல். இதிலும் நாங்கள் வெல்லுவோம். எனவே பாராளுமன்றம் செல்லாமலே நிறைய விடயங்களைச் செய்யலாம். மங்கள சமரவீரவும் இதே போன்ற பாதையைத் தெரிவு செய்திருப்பதையிட்டு நான் மகிழ்ச்சி அடைகிறேன். எல்லோருமே இதனை முயற்சி செய்து பார்க்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

About the author

Administrator

Leave a Comment