உள்நாட்டு செய்திகள்

இலங்கையர் குவைத் செல்வது தடை

Written by Administrator

ஆகஸ்ட் மாதத்திலிருந்து வர்த்தக விமான சேவைகளை குவைத் ஆரம்பிக்கவுள்ள நிலையில் இலங்கை உட்பட பல நாடுகளில் இருந்து குவைத்துக்கு வருகை தருவது மறு அறிவித்தல்வரை தடை செய்யப்பட்டுள்ளது. களும்

இலங்கை, பங்களாதேஷ், பிலிப்பைன்ஸ், இந்தியா, பாகிஸ்தான், ஈரான், நேபாளம் ஆகிய நாடுகளை தவிர, குவைத் நாட்டவர்களும் அந்நாட்டில் வசிப்பவர்களும், குவைத்திலிருந்து வெளியேறவும் குவைத்திற்கு வருவதற்குமான அனுமதியை வழங்குவதற்கு அந்நாட்டு அமைச்சரவை முடிவு செய்துள்ளதாக, குவைத் அரசாங்க தொடர்பாடல் நிலையம் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று நிலையை அடுத்து,அந்நாட்டு விமான சேவைகள் வழமைக்குத் திரும்பும் நிலையில், மேலும் ஒரு வருட காலம் வரை, விமான நிலையத்தின் முழு செயற்பாட்டையும் வழமைக்கு கொண்டுவருவதை, எதிர்பார்க்க முடியாது எனவும் அறிவித்துள்ளது.

About the author

Administrator

Leave a Comment