லங்காபுர பிரதேச செயலகத்தில் கொரோனா. செயலகம் இழுத்து மூடப்பட்டது

18

கொரோனா பரவல் அசசுறுத்தல் காரணமாக பொலன்னறுவை மாவட்டத்தின் லங்காபுர பிரதேச செயலாளர் அலுவலகம் நேற்று (30) மூடப்பட்டது. அலுவலக ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதன் காரணமாகவே செயலகத்தை மூடியதாக பொலன்னறுவை பிரதேச சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் டப்.கே.டப்.எஸ் குமாரவன்ச தெரிவித்தார்.

லங்காபுர பிரதேச செயலகத்திலுள்ள அனைத்து ஊழியர்களையும் பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தியபோது ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது இனம் காணப்பட்டது என சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

இந்த ஊழியர் கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் இனங்காணப்பட்ட தொற்றாளரின் உறவினர் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இவருடன் தொடர்புடையவர்களை இனம் காணுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.