உள்நாட்டு செய்திகள்

அவன்கார்ட் வழக்குக்கு இடைக்காலத் தடை உத்தரவு

Written by Administrator

அவன்கார்ட் விவகாரத்தில் அவன்கார்ட் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதி மற்றும் மேஜர் ஜெனரல் (ஓய்வு) பாலித்த பெர்ணான்டோவுக்கு எதிராக மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கினை இடைநிறுத்துவதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவொன்றைப் பிறப்பித்துள்ளது.

அவன்கார்ட் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதியும் மேஜர் ஜெனரல் (ஓய்வு) பாலித்த பெர்ணான்டோவும் முன்வைத்த மனுவை அடுத்தே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த இருவர் சார்பிலும் ஆஜராகிய சட்டத்தரணி இந்த வழக்கை சட்டவிரோதமானது என அறிவிக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றத்துக்கு கோரிக்கை விடுத்திருந்தார். இலஞ்சம் தொடர்பான குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்யும் ஆணைக்குழுவில் இரண்டு ஆணையாளர்களதும் எழுத்து மூல ஒப்புதல் இல்லாமல் இது தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அவர் முறையிட்டிருந்தார்.

இருந்த போதும் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சம்பா ஜானகி ராஜரத்ன இந்த ஆரம்ப ஆட்சேபனையை நிராகரித்து வழக்கைத் தொடர உத்தரவிட்டிருந்தார். அரச உடைமையான அவன்ட் கார்ட் மேரிடைம் சேர்விசஸின் தலைவர்களான நிஸ்ஸங்க சேனாதிபதியும் மேஜர் ஜெனரல் (ஓய்வு) பாலித்த பெர்ணான்டோவும் அவன்கார்ட் மிதக்கும் ஆயுதக் கொடுக்கல் வாங்கலின் போது 35 மில்லியன் ரூபா இலஞ்சம் பெற்றதாகக் குற்றம் சாட்டப்பட்டிருந்தனர்.

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுச் சட்டத்தின் 17,19,21,25 ஆம் பிரிவுகளின் கீழ் 45 குற்றச்சாட்டுக்களை இலஞ்ச ஊழல் ஆணையாளர் இவர்கள் மீது முன்வைத்திருந்தார்.

About the author

Administrator

Leave a Comment