ரவூப் ஹக்கீமின் புத்தக வெளியீடு

12

இஸ்லாத்தைப் பற்றியும் முஸ்லிம்கள் பற்றியும் பரப்பப்பட்டு வரும் தவறான கருத்துக்களுக்கு விளக்கமளிக்கும் வகையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரினால் எழுதப்பட்ட ஆங்கில நூலின் வெளியீட்டு விழா இன்று நடைபெறவுள்ளது.

கண்டி அம்பிட்டிய உடகமவில் உள்ள கோல்டன் கிரவுன் ஹோட்டலில் பி.ப.4.30 மணிக்கு இந்நிகழ்வு நடைபெறவுள்ளது.

நிகழ்வில் ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதுவர் தயான் ஜயதிலக்க, மொரகஸ்வெவ விஜித தேரர், பேராசிரியர் ஹுஸைன் மியா, நூலின் வெளியீட்டாளரான விஜித யாப்பா பதிப்பகத்தின் உரிமையாளர் விஜித்த யாப்பா, நூலாசிரியர் ரவூப் ஆகியோர் உரையாற்றவுள்ளனர்.