முஸ்லிம் பிரதிநிதித்துவம் உறுதி செய்யப்படும் ?

6

கடந்த பாராளுமன்றத்தில் முஸ்லிம் பிரதிநிதித்துவத்தைப் பேணும் வகையில் அங்கத்துவம் வகித்த 21 பாராளுமன்ற உறுப்பினர்களைத் தக்க வைத்துக் கொள்ளும் நிலையை முஸ்லிம் சமூகம் எட்டியிருக்கின்றது.

இதுவரை வெளியிடப்பட்டுள்ள விருப்பு வாக்குகளின் எண்ணிக்கை அடிப்படையில் சிலரது அங்கத்துவம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதோடு, நாளை மறுநாள் வர்த்தமானி அறிவித்தலினூடாக வெளியிடப்படும் தேசியப்பட்டியல் உறுப்பினர்களிலும் முஸ்லிம் பிரதிநிதிகளுக்கான வாய்ப்புக்கள் அதிகமாகக் காணப்படுகின்றன. இம்முறை பல்வேறு கட்சிகளினூடாகவும் முஸ்லிம் பிரதிநிதிகள் பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துவது விஷேட அம்சமாகும்.

கபீர் ஹாஷிம் (கேகாலை – 58,716), ரிஷாத் பதியுதீன் (வன்னி – 28,203), காதர் மஸ்தான் (வன்னி – 13,454), ரவூப் ஹக்கீம் (கண்டி – 83,398), அப்துல் ஹலீம் (கண்டி – 71,063), எம். எஸ். தௌபீக் (திருகோணமலை – 43,759), இம்ரான் மஹ்ரூப் (திருகோணமலை -39,029), எஸ்.எம்.மரிக்கார் (கொழும்பு 96,916), முஜிபுர் ரஹ்மான் (கொழும்பு – 87,589), இஷாக் ரஹ்மான் (அநுராதபுரம் -49,290), மொஹமட் ஹரீஸ் (அம்பாறை – 36,850), பைசல் காஸிம் (அம்பாறை – 29,423), ஏஎல்எம் அதாவுல்லா (அம்பாறை – 35,697), முஷர்ரப் (அம்பாறை – 18,389), ஹாபிஸ் நஸீர் (மட்டக்களப்பு – 17,599), அலி சப்ரி ரஹீம் (புத்தளம் – 33,509) ஆகிய 16 பேரின் பெயர்கள் தெரிவானவர்களின் பட்டியலில் குறிப்பிடப்படுகின்ற நிலையில் களுத்தறை மாவட்டத்திலிருந்து மூன்று தேசியப்பட்டியல் உறுப்பினர்கள் பாராளுமன்றத்துக்குத் தெரிவாவதும் உறுதிப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளது.

நீண்ட காலத்துக்குப் பின்னர் புத்தளம் பிரதேச மக்கள் ஒன்றிணைந்து தமக்கான பிரதிநிதியைப் பெற்றுக் கொண்டுள்ள அதேநேரம் குருநாகலை மாவட்டம் அந்த வாய்ப்பை இழந்துள்ளது.