மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் தனி அரசாங்கம்

9

நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 145 ஆசனங்களைப் பெற்ற போதிலும் தாம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் ஆட்சியமைப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்குச் சார்பாக களமிறங்கிய கட்சிகள் வென்ற ஆசனங்களின் துணையுடன் அரசாங்கம் அமைக்கப்படவுள்ளது.  ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் 02 உறுப்பினர்களின் ஆசனமும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி சார்பாக பிள்ளையான என அழைக்கப்படும் சிவநேசத்துரை செல்வத்துரை பெற்றெடுத்துள்ள ஆசனமும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பெற்றுக் கொண்ட ஒரு ஆசனமும், தேசியக் காங்கிரஸின் ஏஎல்எம் அதாவுல்லாவின் ஆசனமும் இணைக்கப்பட்டு மூன்றிலிரண்டுக்குத் தேவையான 150 ஆசனங்கள் பெற்றுக் கொள்ளப்படும் எனக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தேர்தலில் மூன்றிலிரண்டு பெறாவிட்டாலும் பாராளுமன்றத்தில் அதைத் தம்மால் பெற்றுக் கொள்ள முடியும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தேர்தலன்று ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்தார்.