பிரதமர் நாளை பதவியேற்பு

11

இலங்கைச் சனநாயகக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றத்தின் பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ நாளை பதவியேற்கவுள்ளார். வரலாற்றுச் சிறப்பு மிக்க களனி விகாரையில் நாளை காலை 8.30 மணிக்கு பதவியேற்பு வைபவம் நடைபெறவுள்ளது.

நடந்து முடிந்த தேர்தலில் பெரும்பான்மையை விட அதிகமான ஆசனங்களைப் பெற்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெற்றி பெற்றுள்ள நிலைமையில் அமையவுள்ள பாராளுமன்றத்தின் பிரதமராகவே மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்கவுள்ளார். கடந்த இரு வருடங்களில் அவர் மூன்றாவது தடவையாக பிரதமர் பதவியை ஏற்கவுள்ளார்.

2004 ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் அரசாங்கத்தில் மஹிந்த ராஜபக்ஷ பிரதமராகப் பதவி வகித்தார். அதன் பின்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவினால் பதவி கவிழ்க்கப்பட்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் இடத்துக்கு 2018 ஒக்டோபர் 26 முதல் டிசம்பர் 15 வரை நியமிக்கப்பட்டார். பின்னர் 2019 ஜனாதிபதி தேர்தலில் அவரது சகோதரர் கோதாபய ராஜபக்ஷ வெற்றியீட்டியதன் பின்னர் மீண்டும் பிரதமராக நியமிக்கப்பட்டார். தற்பொழுது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அமோக வெற்றியீட்டி அமைக்கப் போகும் ஆட்சியில் கட்சியின் தலைவரான மஹிந்த ராஜபக்ஷ நான்காவது தடவையாக நாளை பிரதமராக நியமிக்கப்படவுள்ளார். கடந்த இரண்டு வருட காலத்தில் அவர் மூன்றாவது முறையாக நாளை பிரதமராகப் பதவியேற்கிறார்.

19 ஆவது திருத்தச் சட்டத்தின் கீழ் அதிகாரமுள்ள பிரதமராக இவர் தொழிற்படுவார்.