உள்நாட்டு செய்திகள்

20 பயங்கரவாத அமைப்புக்கள் மீதான தடையை ஐரோப்பிய ஒன்றியம் நீடித்தது

Written by Administrator

இலங்கையின் தமிழீழ விடுதலைப் புலிகள் (எல்ரிரிஈ) உள்ளிட்ட 20 பயங்கரவாத அமைப்புக்களின் மீதான தடையை ஐரோப்பிய ஒன்றியம் ஜூலை 30 ஆம் திகதி முதல் நீடித்துள்ளது. பயங்கரவாதத்துக்கு முகம் கொடுக்கும் வகையில் இந்தத் தடை நீடிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் 30 நாடுகளில் இந்தத் தடை அமுலில் இருக்கும்.

தடை நீடிப்புக்கென வெளியிடப்பட்டுள்ள நபர்களினதும் அமைப்புக்களினதும் பெயர்களில், அல் அக்ஸா தியாகிகள் படை, அல் அக்ஸா ஈவி, பப்பார் கல்ஸா, பிலிப்பைன்ஸின் கமியுனிஸ்ட் கட்சி (NPA – New Peoples Army உள்ளடங்கலாக), புலனாய்வுக்கும் பாதுகாப்புக்குமான ஈரானிய அமைச்சின் உள்நாட்டுப் பாதுகாப்புக்கான செயலகம், ஜமாஆ அல் இஸ்லாமியா, பாரிய இஸ்லாமிய போராளிகள் முன்னணி (IBDA-C) , ஹமாஸ் (இஸ்ஸுத்தீன் கஸ்ஸாம் உட்பட), ஹிஸ்புல்லா ஆயுதப் பிரிவு, ஹிஸ்புல் முஜாஹிதீன், காலிஸ்தான் ஸின்தாபாத் படை, குர்திஸ்தான் ஊழியர் சங்கம் (PKK),  பலஸ்தீனிய இஸ்லாமிய ஜிஹாத் (PIJ) பலஸ்தீன் விடுதலைக்கான பொபியூலர் முன்னணி ( PFLP),  என்பனவும் அடங்குகின்றன.(NewsinAsia)

About the author

Administrator

Leave a Comment