உள்நாட்டு செய்திகள்

புதிய அரசுக்கான முதல் வாழ்த்து இந்தியா, அமெரிக்காவிடமிருந்து

Written by Administrator

நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் வெற்றியீட்டிய புதிய அரசாங்கத்துக்கு அண்டை நாடான இந்தியா முதலில் வாழ்த்துத் தெரிவித்தது. தொடர்ந்து அமெரிக்காவும் மாலைதீவும் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளன.

புதிய ஆட்சி தொடர்பில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு தொலைபேசியில் வாழ்த்துத் தெரிவித்ததைத் தொடர்ந்து பிரதமர் தனது டுவிட்டரில் வெளியிட்டிருந்த செய்தியில், இலங்கை மக்களின் பலமான ஒத்துழைப்புடன் பிரதமர் நரேந்திர மோடியுடனான தொடர்பை தொடர்ச்சியாக முன்னெடுக்க எதிர்பார்ப்பதாகவும், இரு நாடுகளுக்குமிடையிலான உறவு நட்பு ரீதியானது மட்டுமன்றி உறவு ரீதியானதுமாகும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

இதேவேளை அரசாங்கத்துடனும் புதிய பாராளுமன்றத்துடனும் இணைந்து செயற்படுவதற்கு எதிர்பார்ப்பதாக அமெரிக்கத் தூதரகம் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. கொரோனா சவால்களுக்கு மத்தியில் அமைதியான தேர்தலொன்றை திட்டமிட்டு நடத்தியமைக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். புதிய பாராளுமன்றம் கூடியதும் சகலரையும் இணைத்துக் கொண்டு பொருளாதாரத்தை வழமைக்குக் கொண்டு வரும் செயற்பாட்டைக் கட்டியெழுப்புதலையும், மனித உரிமைகள் மற்றும் சட்டத்தின் ஆதிக்கத்தை நடைமுறைப்படுத்தலையும் அரசாங்கம் புதுப்பிக்கும் என நாம் எதிர்பார்க்கிறோம் என அமெரிக்கத் தூதரகம் அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாலைதீவு ஜனாதிபதி இப்ராஹிம் முஹம்மத் ஸாலிஹ், மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய சபாநாயகருமான முஹம்மத் நஸீத் ஆகியோரும் பிரதமருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.

About the author

Administrator

Leave a Comment