உள்நாட்டு செய்திகள்

சிறையிலுள்ள மரணதண்டனைக் கைதியை பாராளுமன்றத்துக்கு அனுப்பிய மக்கள்

Written by Administrator

கொலைக் குற்றம் சாட்டப்பட்டுள்ள இருவரை மக்கள் இமமுறை பாராளுமன்றத்துக்குத் தெரிவு செய்து அனுப்பியுள்ளனர்.

2015 தேர்தல் பிரச்சார வேலைகளில் ஈடுபட்டிருந்த ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளரான சாந்த தொடங்கொடவைச் சுட்டுக் கொன்றதற்காக மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள பிரேமலால் ஜயசேகரவை மாவட்டத்தின் இரண்டாவது அதிக பட்ச விருப்பு வாக்கான 142,037 வாக்குகளை அளித்து இரத்தினபுரி மக்கள் பாராளுமன்றம் அனுப்பியுள்ளனர். சொக்கா மல்லி என அழைக்கப்படும் இந்தப் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.

அதேபோல 2005 ஆம் ஆண்டில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தைக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட பிள்ளையான் எனப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் சார்பில் மட்டக்களப்பு மக்களால் மாவட்டத்தின் அதிகூடிய விருப்பு வாக்குகளை (54,198) வாக்குகளை வழங்கி பாராளுமன்றத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். 3000 இராணுவ வீரர்களைக் கொன்றதாக தேர்தல் பிரச்சாரங்களின் போது கருத்து வெளியிட்ட கருணா அம்மானின் இடத்தை பாராளுமன்றத்தில் இவர் நிரப்பவுள்ளார்.

பாராளுமன்றத்துக்குத் தெரிவு செய்து அனுப்பப்பட்டுள்ள இருவருமே சிறைக் கைதிகள் என்பதும் இவர்கள் சிறையில் இருந்தவாறே போட்டியிட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

About the author

Administrator

Leave a Comment