உள்நாட்டு செய்திகள்

தியவன்னா ஓயவில் ஞானசார தேரர்

Written by Administrator

தியவன்னா ஓயவில் அமைந்துள்ள பாராளுமன்றத்துக்கு இம்முறை தேசியப்பட்டியல் மூலமாக ஞானசார தேரரை அனுப்புவதற்கு அப்பே ஜன பல கட்சி தீர்மானித்திருப்பதாக பொதுபல சேனாவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

கடந்த தேர்தலில் பெற்ற வாக்குகளை விட அதிகமாகப் பெற்றுள்ள அப்பே ஜனபல கட்சியின் தேசியப்பட்டியல் ஊடாகவே இவர் பாராளுமன்றம் செல்லவுள்ளார். இந்தக் கட்சியில் போட்டியிட்ட அதுரலியே ரதன தேரர் தோல்வியுற்ற போதும் கட்சி நாடளாவிய ரீதியில் பெற்ற 67,758 வாக்குகளுக்காகக் கிடைக்கப்பட்ட தேசியப்பட்டியல் நியமனமே இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

இம்முறை பாராளுமன்றத்தின் ஹன்சார்ட் அறிக்கையில் பதிவு செய்யப்படப் போகும் ஒரே பௌத்த மதகுருவின் குரலாக ஞானசார தேரரின் குரல் அமையவிருப்பது குறிப்பிடத்தக்கது.

About the author

Administrator

Leave a Comment