உள்நாட்டு செய்திகள்

இலங்கைக்கான பயணங்களை ஒத்திப் போடச் சொல்கிறது அமெரிக்கா

Written by Administrator

கொவிட் 19 மற்றும் சாத்தியமான பயங்கரவாதத் தாக்குதல் பற்றிய அச்சம் நிலவுவதால் இலங்கைக்கான பயணங்களை மீளாய்வு செய்யுமாறு அமெரிக்க அரசாங்கம் தனது குடிமக்களைக் கேட்டுள்ளது.

அமெரிக்காவின் நோய்த்தடுப்புக்கும் கட்டுப்பாட்டுக்குமான நிலையம் இராஜாங்கத் திணைக்களத்துடன் நடத்திய பேச்சுவார்த்தைகளை அடுத்து அமெரிக்காவில் இருந்து வேறெந்த நாட்டுக்கும் பயணிப்பதற்காக விதிக்கப்பட்டிருந்த நான்காவது மட்டத்தில் நடைமுறைப்படுத்தும் தடையை தளர்த்தியுள்ளது.

உலகளாவிய கொரோனா அச்சுறுத்தலின் அளவை வைத்து இந்த அளவு மட்டம் தீர்மானிக்கப்படுகிறது. நான்காவது மட்டமே தீவிரமானதாகக் கருதப்படுகிறது. இந்த நிலையில் அமெரிக்க பயண ஆலோசனை நிலையம் நேற்று முன்தினம் புதுப்பித்த பயண ஆலோசனைகளின் படி இலங்கை மூன்றாவது மட்டத்தில் உள்ளதால் அமெரிக்கர்கள் இலங்கைக்கு வருகை தருவதை ஒத்திப் போடும் படி கேட்கப்பட்டுள்ளனர். மூன்றாவது மட்டத்தில் அபாய அச்சுறுததல் இதுவரை நீங்காத நாடுகளுக்கு மட்டுமே பயணத் தடை விதிக்கப்படுகிறது.

இலங்கை வீட்டில் முடங்கியிருப்பதைத் தளர்த்தியுள்ளது. பயணங்களும் வியாபாரங்களும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. எனவே இலங்கைக்குச் செல்வதற்கு முன்னர் ஆலோசனை பெற்றுக் கொள்ளப்பட வேண்டும் என அமெரிக்க பயண ஆலோசனை நிலையம் அறிவித்துள்ளதோடு பேணப்பட வேண்டிய ஒழுங்குகளையும் அறிவுறுத்தியுள்ளது.

அத்தோடு பொது இடங்களிலும் சுற்றுலாத் தலங்களிலும் முன்னறிவித்தலுடனோ இன்றியோ மேற்கொள்ளப்பட முடியுமான பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பிலும் அந்த நிலையம் அமெரிக்கர்களை அறிவுறுத்தியுள்ளது.

About the author

Administrator

Leave a Comment