பிள்ளையான் பதவி பெறுவதில் சட்டம் குறுக்கு நிற்கிறதா ?

45

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் பிள்ளையான் எனப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தனுக்கு நேற்றைய தினம் அமைச்சுப் பதவியேற்கும் நிகழ்வுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதும் அவர் நேற்று வருகை தந்திருக்கவில்லை.

தேர்தலுக்குப் பின்னர் தமது கட்சிக்கும் அமைச்சுப் பதவி வழங்கப்படும் என பொதுஜன பெரமுனவினால் உறுதியளிக்கப்பட்டிருந்ததாக பிள்ளையானின் தரப்புகள் சுட்டிக் காட்டுகின்றன. கல்வி அமைச்சின் கீழ் வருகின்ற கல்வி மறுசீரமைப்பு, திறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் தொலைக்கல்வி மேம்பாடு இராஜாங்க அமைச்சர் மாத்திரம் நேற்று நியமிக்கப்படவில்லை. இந்த நிலையில் எஞ்சியுள்ள இராஜாங்க அமைச்சர் பதவி பிள்ளையானுக்கு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பாளர் பதவியிலும் மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பதவி நேற்று வழங்கப்படவில்லை.

இந்த நிலையில் கொலைக் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் இருக்கும் பிள்ளையான் நேற்றைய பதவியேற்பு வைபவத்துக்கு வர முடியாத அளவுக்கு சட்டம் குறுக்கே நின்றுள்ளதாகத் தெரிகிறது. பதவி வழங்குவதற்கு முன்னர் அவரை வெளியில் எடுப்பதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.