புதிய பாராளுமன்றத்தின் குடும்பப் பின்னணி

20

புதிய பாராளுமன்றத்தில் குடும்ப சகிதம் வந்தவர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்களில் நால்வர் தந்தை மகன் உறவினர்கள். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ – மகன் நாமல் ராஜபக்ஷ. சமல் ராஜபக்ஷ – சசீந்த்ர ராஜபக்ஷ. தினேஷ் குணவர்தன – யதாமினி குணவர்தன. ஜனக பண்டார தென்னகோன் – பிரமித பண்டார தென்னகோன். அனைவரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவைச் சேர்ந்தவர்கள்.

இதேபோல பரம்பரையாக பாராளுமன்றக் கதிரைகளை அலங்கரிப்பவர்களும் புதிய பாராளுமன்றத்தில் இருக்கிறார்கள். முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச – சஜித் பிரேமதாச. முன்னாள் பிரதமர் தி.மு.ஜயரத்ன – அனுராத ஜயரத்ன. முன்னாள் பிரதமர் ரத்னசிரி விக்கிரமநாயக்க – விதுர விக்கிரமநாயக்க. முன்னாள் அமைச்சர் மஹிந்த விஜேசேகர – காஞ்சன விஜேசேகர. முன்னாள் அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம – திலும் அமுனுகம. முன்னாள் அமைச்சர் அநுருத்த ரத்வத்த – லொஹான் ரத்வத்த. முன்னாள் அமைச்சர் ஜயலத் ஜயவர்தன – கவிந்த ஜயவர்தன. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பர்டி பிரேமலால் திசாநாயக்க – துமிந்த திசாநாயக்க. முன்னாள் அமைச்சர் ரெஜி ரணதுங்க – பிரசன்ன ரணதுங்க. முன்னாள் அமைச்சர் ரிச்சர்ட் பதிரண – ரமேஷ் பதிரண. முன்னாள் அமைச்சர் அமரசிரி தொடங்கொட – இசுறு தொடங்கொட. முன்னாள் பிரதி அமைச்சர் எச்ஜிபி நெல்சன் – கிங்ஸ் நெல்சன். முன்னாள் முதலமைச்சர் மொஹான் சாலிய எல்லாவல – அகில எல்லாவல. முன்னாள் பிரதி அமைச்சர் தர்மதாச வன்னியாரச்சி – பவித்ரா வன்னியாரச்சி. முன்னாள் அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் – ஜீவன் தொண்டமான். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹீன் மஹத்தயா லியனகே – வருண லியனகே. முன்னாள் அமைச்சர் சரத் சந்திர ராஜகருணா – ஹர்ஷன ராஜகருணா. முன்னாள் அமைச்சர் கலாநிதி ஜகத் பாலசூரிய மற்றும் முன்னாள் ஆளுநர் குமாரி பாலசூரிய – தாரக பாலசூரிய. முன்னாள் பிரதி அமைச்சர் எஸ்.டப்.அலவதுவல – ஜே.சி.அலவதுவல. முன்னாள் பிரதி அமைச்சர் எச்.பி. சேமசிங்க – ஷெஹான் சேமசிங்க. முன்னாள் அமைச்சர் பெஸ்டஸ் பெரேரா – நிரோஷன் பெரேரா. முன்னாள் அமைச்சர் எஸ்டிஆர் ஜயரத்ன – பியங்கர ஜயரத்ன. முன்னாள் அமைச்சர் வின்சன்ட் பெரேரா – சுசின் சஞ்சய பெரேரா. முன்னாள் பிரதி அமைச்சர் எச்.ஆர்.மித்ரபால – துஷ்மந்த மித்ரபால. 

இது தவிர அரசியல்வாதிகளின் புதல்வர்கள் என்ற வகையில் சிலர் பாராளுமன்றம் நுழைந்திருக்கிறார்கள். முன்னாள் முதலமைச்சர் மொஹான் சாலிய எல்லாவல – அகில எல்லாவல. முன்னாள் முதலமைச்சர் மஹிபால ஹேரத் – கனக ஹேரத். இலங்கை மஹஜன கட்சியின் செயலாளர் ரஞ்சித் நவரத்ன – அசங்க நவரத்ன. முன்னாள் மாகாண சபை அமைச்சர் டி.வி. உபுல் – டி.வி.சானக. இலங்கை தமிழ் காங்கிரஸ் தலைவர் குமார் பொன்னம்பலம் – கஜேந்திர குமார் பொன்னம்பலம்.

உறவு வழியாக அரசியலில் பிரவேசித்து பாராளுமன்றம் நுழைந்தவர்களும் இருக்கிறார்கள். முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஸ்ரீலால் விக்கிரமசிங்கவின் மனைவி ராஜிகா விக்கிரமசிங்க. முன்னாள் அமைச்சர் என்.எம்.பெரோவின் பெறா மகன் பேராசிரியர் திஸ்ஸ விதாரண. முன்னாள் அமைச்சர் ஜெயராஜ் பெர்ணான்டோ புள்ளேயின் மனைவி சுதர்ஷனி பெர்ணான்டோபுள்ளே. முன்னாள் அமைச்சர் சாலிந்த திசாநாயக்கவின் மனைவி மஞ்சுளா திசாநாயக்க. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விஜயகுமாரதுங்கவின் பெறா மகன் ரஞ்சன் ராமநாயக்க. முன்னாள் மாகாண சபை உறுப்பினர் நாமல் குணவர்தனவின் சகோதரி கோகிலா ஹர்ஷனி குணவர்தன. முன்னாள் அமைச்சர் ஏசீஎஸ் ஹமீதின் மருமகன் அப்துல் ஹலீம். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கொட்பிரி பெர்ணான்டோவின் பெறாமகன் அருந்திக பெர்ணான்டோ. முன்னாள் அமைச்சர் அதாவுத செனவிரத்னவின் பெறாமகன் உதயகாந்த குணதிலக. ஊவா மாகாண முன்னாள் அமைச்சர் அநுர விதானகமகேயின் சகோதரன் தேனுக விதானகமகே. முன்னாள் பிரதியமைச்சர் ரூபா கருணாதிலக்கவின் பெறாமகன் கயந்த கருணாதிலக. முன்னாள் பிரதி அமைச்சர் டீ. பஸ்குவலின் சகோதரனின் மகன் அநூப பஸ்குவல். முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவின் உறவினர் சி.வி.விக்னேஸ்வரன். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ கவிரத்னவின் மனைவி ரோஹினி கவிரத்ன விஜேரத்ன. முன்னாள் அமைச்சர் காமினி அதுகோரலவின் சகோதரி தலதா அதுகோரல. முன்னாள் அமைச்சர் அமரசிரி தொடங்கொடவின் சகோதரியின் மகன் சந்திம வீரக்கொடி. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்சாவின் மனைவி முதிதா பிரியசாந்தி.

ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஷவின் குடும்பத்தில் சகோதரர் மஹிந்த ராஜபக்ஷ, அவரது மகன் நாமல் ராஜபக்ஷ, சகோதரர் சமல் ராஜபக்ஷ, அவரது மகன் அவரது மகள் சசிந்திர ராஜபக்ஷ. ஜனாதிபதியின் தங்கையின் மகன் நிபுன ரணவக.

இம்முறைய பாராளுமன்றத்தில் இரண்டு முன்னாள் ஜனாதிபதிகள் இருக்கிறார்கள். தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன.

பாராளுமன்றத்தில் வடக்கும் கிழக்கும் இணைக்கப்பட்டிருக்கின்றன. முன்னாள் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனும், முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமதும் இம்முறை பாராளுமன்றம் நுழைந்திருக்கிறார்கள்.

பெண் பிரதிநிதித்துவம் 13 இலிருந்து 08 ஆகக் குறைவடைந்திருக்கிறது.