ஐஎஸ்ஐஸ் ரிம்ஸானை விசாரிக்க வேண்டாமென உத்தரவு கிடைத்தது

8

ஐஎஸ் இல் இணைந்ததன் பின்னர் நாடு திரும்பிய மொஹமட் நிலாப்தீன் மொஹமட் ரிம்ஸான் மீது விசாரணை நடத்த வேண்டாமென தேசிய புலனாய்வுச் சேவை பயங்கரவாத புலனாய்வுப் பிரிவிடம் 2018 இல் கேட்டுக் கொண்டதாக முன்னாள் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் நாலக டி சில்வா ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் தெரிவித்தார்.

ரிம்ஸான் துருக்கியிலிருந்து நாடு கடத்தப்பட்டிருக்கலாம் என அவரை விமான நிலையத்தில் வைத்தே விசாரிக்குமாறும் அதற்கென விஷேட பொலிஸ் பிரிவொன்றை அமர்த்துமாறும்  2018 இல் முன்னாள் பொலிஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தர பயங்கரவாத புலனாய்வுப் பிரிவைக் கேட்டிருந்தார்.

தேசிய புலனாய்வுப் பிரிவு விசாரணையை இடைநிறுத்தக் கோரியபோது நான் இது தொடர்பில் பொலிஸ் மாஅதிபருடைய கடிதத்தை அவர்களிடம் வினவினேன் எனத் தெரிவித்த நாலக டி சில்வா, 2018 மார்ச் 14 இல் பொலிஸ் மாஅதிபர் பூஜித ஜயசுந்தர அப்போதைய சட்டம் ஒழுங்கு அமைச்சின் செயலாளருக்கு விசாரணைகளை இடைநிறுத்தும்படி கடிதம் அனுப்பியிருந்தார் என்றும் தெரிவித்தார்.