ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைத் தேடிக் கொண்டிருக்கிறேன்

7

ராஜபக்ஷ ஒரு பலமான தலைவர். ஆனால் நான் அவரின் அரசியலை ஏற்கவில்லை என முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் தலைவருமான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருக்கு அமைச்சுப் பதவி வழங்கப்படவில்லை. செயலாளருக்கு பத்திக் அமைச்சு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அதன்கீழ் எந்தத் திணைக்களமும் இல்லை. இந்நிலையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை நினைத்து நான் வருந்துகிறேன். கட்சியை நினைத்து அழுவதா சிரிப்பதா என்று எனக்கு விளங்கவில்லை என அவர் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எங்கே என்று நான் எல்லா இடங்களிலும் தேடிப் பார்க்கிறேன். மைத்திரிபால சிரிசேன கடந்த ஆண்டு கட்சியை மோசமான முறையில் அழித்து விட்டார். இந்நிலையில் ஒரு புதிய தலைமையின் கீழ் நாங்கள் எங்கள் கட்சி உறுப்பினர்களைத் தேர்ந்தெடுத்து கட்சியை முன்னோக்கி அழைத்துச் செல்வோம் என அவர் மேலும் தெரிவித்தார்.