மாணவனுக்கு கொரோனா. ஆசிரியர், மாணவர் உட்பட 100 பேர் தனிமைப்படுத்தல்

5

பாடசாலைகளை மீளத் திறப்பதற்கு கல்வி அமைச்சின் செயலாளர் அனுமதி வழங்கியுள்ள நிலையில் கொரோனா பரவல் பிரதேசமாக அடையாளப்படுத்தப்பட்ட ராஜாங்கனய பிரதேசத்தில் 16 வயது மாணவரொருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் அவர் கல்வி பயிலுகின்ற ஐந்தாம் சேனை பாடசாலை மாணவர்கள் 50 பேர், ஆசிரியர்கள் 06 பேர் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். இந்தப் பிரதேசவாசிகள் 40 பேரும் சுயதனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக வட மத்திய மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் பாலித பண்டார தெரிவித்தார்.

ராஜாங்கன பிரதேசத்தின் சுகாதார வைத்திய அதிகாரிகள் நேற்று முன்தினம் எழுமாறாக மேற்கொண்ட 102 பீசிஆர் பரிசோதனைகளின் போதே இந்த மாணவருக்கு கொரோனா தொற்றியிருப்பது தெரியவந்திருக்கிறது.

இதனைத் தொடர்ந்து பாடசாலை மூடப்படாத போதும் நேற்றும் நேற்று முன்தினமும் மாணவர்கள் பாடசாலைக்கு சமுகம் தரவில்லை. நேற்று 08 ஆசிரியர்கள் மட்டுமே கடமைக்கு வந்துள்ளனர்.