மாத்தளையில் 1600 ஏக்கர் தனியார் காணி சுவீகரிப்பு

9

நக்கிள்ஸ் மலைத் தொடருக்குள் அடங்குகின்ற மாத்தளை மாவட்டத்தின் 1600 ஏக்கர் தனியார் காணி அரசினால் சுவீகரிக்கப்படவுள்ளது.

நக்கிள்ஸ் சுற்றாடல் பாதுகாப்பு வலயத்துக்குச் சொந்தமான 31,000 ஹெக்டயர் காணியில் 15,000 ஹெக்டயர் மாத்தளை மாவட்டத்துக்கும் எஞ்சிய 16,000 ஹெக்டயர் கண்டி மாவட்டத்துக்கும் உரியதாகும். மாத்தளை மாவட்டத்தின் பிட்டவள வெளிக்கு அருகாமையில் கோணமடவத்த பிரதேசத்தில் தனியாருக்குச் சொந்தமான 1600 ஏக்கர் காணியின் உரிமையாளரைத் தேட முடியாமை, உரிமையாளர் முன்வராமை போன்ற சிக்கல்கள் எதிர்நோக்கப்படுவதால் அந்தக் காணியை அரசாங்கம் சுவீகரிக்கத் தீர்மானித்திருப்பதாகவும், வெகுவிரைவில் இவை சுவீகரிக்கப்படும் எனவும் மாத்தளை மாவட்ட மேலதிகச் செயலாளர் இஷான் விஜேதிலக தெரிவித்துள்ளார்.

லக்கல பிரதேச சபைக்கே இந்தக் காணிகள் கையகப்படுத்தப்படவுள்ளன. கோனமடவத்த தனியார் காணிகளை அளந்து மதிப்பிடும் பணிகள் இறுதிக் கட்டத்தில் உள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. (லதீப்)