சட்டவிரோத மது விற்பனையாளர்களின் சொத்துக்கள் அரசுடைமையாக்கப்படும்

5

சட்டவிரோத மதுபான விற்பனையினால் பாரிய அளவு நிதி திரட்டியுள்ள மதுபான வியாபாரிகளின் சொத்துக்கள் அரசுடைமையாக்கப்படவுள்ளன.

திட்டமிட்ட குற்றச் செயல்களுக்கூடாகத் திரட்டிய சொத்துக்களையும் போதைப் பொருள் வியாபாரிகளின் சொத்துக்களையும் வங்கிக் கணக்குகளையும் அரசுடைமையாக்கியது போல சட்டவிரோத மதுபான விற்பனையினால் திரட்டிய சொத்துக்களும் அரசுடைமையாக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்தார். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட சகல தரப்புகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

கடந்த இருவாரங்களில் மட்டும் போதைப் பொருள் வர்த்தகத்தில் 220 கோடி ரூபா பணம் பரிமாறப்பட்டுள்ளதாகவும் அது தொடர்பிலான விசாரணைகளும் தேடுதல்களும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.