உள்நாட்டு செய்திகள்

பாராளுமன்ற முதல் அமர்வில் ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடனம்

Written by Administrator

புதிய அரசாங்கத்தின் முதலாவது பாராளுமன்றம் 20 ஆம் திகதி காலை 9.30 மணிக்குக் கூடவுள்ளது. முதல் நாள் பாராளுமன்ற அமர்வுகளின் நிகழ்ச்சி நிரலுக்கு மேலதிகமாக ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடனமும் அன்று நடைபெறவுள்ளது.

பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வினை ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஷ வைபவரீதியாக அன்றைய தினம் ஆரம்பித்து வைப்பார். அரசியலமைப்பின் 33(2) ஆவது உறுப்புரையின் கீழ் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்துக்கமைய அவரது கொள்கைப் பிரகடனம் அன்றைய தினம் நிகழ்த்தப்படவுள்ளது.

காலையில் நடைபெறும் நிகழ்வுகள் பாராளுமன்ற அங்குரார்ப்பண நிகழ்வுகளாக நடைபெறும். அன்றையதினம் முதலில் சபாநாயகர் தெரிவு, அதன் பின்னர் பாராளுமன்ற உறுப்பினர்களின் பதவிச்சத்தியம் அல்லது உறுதியுரை என்பன இடம்பெறும். இதன் பின்னர் பிரதி சபாநாயகர் மற்றும் குழுக்களின் பிரதித் தவிசாளர் ஆகியோர் தெரிவுசெய்யப்படுவர். அதேதினம் பிற்பகல் வேளையில் பாராளுமன்றத்தின் முதல் அமர்வும் நடைபெற ஏற்பாடாகியுள்ளது. இதுவும் ஜனாதிபதியால் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.

About the author

Administrator

Leave a Comment