உள்நாட்டு செய்திகள்

இந்தியாவின் முதல்தர பல்கலைக்கழகமாக ஜாமிஆ மில்லியா இஸ்லாமியா தெரிவு

Written by Administrator

இந்தியாவின் குடியுரிமைச் சட்டத் திருத்தத்துக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்த ஜாமிஆ மில்லியா இஸ்லாமியா (JMI) பல்கலைக்கழகம் இந்தியப் பல்கலைக்கழகங்களில் முதலாமிடத்தைப் பிடித்துள்ளது. இந்தியக் கல்வி அமைச்சு வெளியிட்ட தரப்படுத்தலில் இந்தப் பல்கலைக்கழகம் 90 புள்ளிகளைப் பெற்று முதலிடம் பெற்றிருக்கிறது.

அருணாச்சலப் பிரதேஷின் ராஜிவ் காந்தி பல்கலைக்கழகம் 83 வீதத்தைப் பெற்று இரண்டாம் இடத்தையும் ஜவஹர்லால் காந்தி பல்கலைக்கழகம் 82 வீத புள்ளிகளைப் பெற்று மூன்றாம் இடத்தையும் அலிகார் பல்கலைக்கழகம் 78 வீதப் புள்ளிகளுடன் நான்காம் இடத்தையும் பெற்றுள்ளன. 2019-20 க்காக மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்ட முக்கிய அளவுகோள்களின் அடிப்படையில் இந்தத் தெரிவு நடைபெற்றுள்ளது.

தேசிய ரீதியான நாற்பது பல்கலைக்கழகங்களில் ஜாமிஆ முதலாவதாகத் தெரிவாகியுள்ளது. தரப்படுத்தலுக்கான முக்கிய அளவுகோள்களில் மாணவர் உள்ளீர்ப்பு, மாணவர்களின் பல்வகைமை என்பனவும் அடங்குகின்றன. பல்வகைமையில் ஆண் பெண் பல்வகைமை, அடுத்த மாநிலங்கள் மற்றும் வெளிநாட்டு மாணவர்கள் கலவை என்பனவும் அடங்குகின்றன. ஆசிரியர் – மாணவர் விகிதாசாரமும் இதனுள் உள்ளடங்குவதோடு பல்கலைக்கழகத்தின் நிதி ஸ்திரத்தன்மையும் முக்கியமானதாக அவதானிக்கப்படுகிறது.

பல்வேறு சவால்களுக்கும் மத்தியில் பல்கலைக்கழகம் அடைந்து கொண்ட இந்த வெற்றிக்கு தரமான கற்பித்தல், உயர்தரத்திலான பொருத்தமான இலக்குமையப்பட்ட ஆராய்ச்சிகள், பல்கலைக்கழகத்தின் தொலை நோக்கு என்பன காரணமாக அமைந்தன என ஜாமிஆ மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் நஜ்மா அக்தர் தெரிவித்தார்.

About the author

Administrator

Leave a Comment