தரம் 01 சீருடை வவுச்சர் காலம் நீடிப்பு

0
3

அனைத்து அரச பாடசாலைகளிலும் தரம் 1 மாணவர்களுக்காக 2020 ஆம் ஆண்டிற்காக விநியோகிக்கப்படும் சீருடை வவுச்சர்களின் செல்லுபடியாகும் காலததை அடுத்த மாதம் 30 ஆம் திகதி வரை நீடிக்கப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

இந்த வவுச்சர்களின் செல்லுபடியாகும் காலம் 2020.08.31ஆம் திகதியுடன் நிறைவடையவிருந்தது. நாட்டில் நிலவிய சூழ்நிலையைக்கருத்திற்கொண்டு மாணவர்களுக்கான இந்த வவுச்சர்கள் மூலம் சீருடைகளை பெற்றுக்கொள்வதற்கு வசதியாக இதற்கான கால எல்லையை மேலும் நீடிப்பதற்காக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here