இலங்கையின் வணிக வங்கிகளில் முதலிட வெளிநாட்டவர்க்கு கூடுதல் அவகாசம்

0
3

கொரோனா காலப்பிரிவில் இலங்கையின் வணிக வங்கிகளின் அறவிடமுடியாக் கடன்கள் அதிகரித்ததன் காரணமாக வங்கிகள் நிதி நெருக்கடியை எதிர்நோக்கியுள்ள நிலையில் இலங்கையின் வணிக வங்கிகளில் முதலிடுவதற்கு வெளிநாட்டு நிதி நிறுவனங்களுக்கு கூடுதல் அவகாசங்களை வழங்குவதற்கு இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.

இதனடிப்படையில் உலக வங்கியின் தனியார் துறை நிதி நிறுவனங்கள், சர்வதேச நிதிக் கூட்டுத்தாபனம், ஆசிய அபிவிருத்தி வங்கி ஆகியவற்றுக்கு அங்கீகரிக்கப்பட்ட இலங்கை வணிக வங்கிகளில் பங்குகளைப் பெறுவதற்கு முன்னர் இருந்த 15 வீத அவகாசம் தற்போது 20 வீதம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கு மேலதிகமாக அவற்றுக்கு வாக்குரிமை வழங்குவதற்கும் இலங்கை நாணயச் சபை தீர்மானித்துள்ளது.

இந்த நிறுவனங்கள் அல்லாத ஏனைய வெளிநாட்டு நிறுவனங்களும் இலங்கையின் வணிக வங்கிகளில் 20 வீதமான பங்கினைப் பெற்றுக் கொள்ள முடியுமாயினும் அவை அதற்கு முன் இலங்கை நாணயச் சபையின் அங்கீகாரத்தைப் பெற வேண்டும் எனவும் இலங்கை நாணயச் சபை தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here