உள்நாட்டு செய்திகள்

இலங்கை மருத்துவர்களையும் தாதிகளையும் கோருகிறது மாலைதீவு

Written by Administrator

தனது நாட்டில் பணியாற்றுவதற்காக இலங்கையில் இருந்து மருத்துவர்களையும் தாதிகளையும் மாலைதீவு அரசாங்கம் இலங்கை அரசாங்கத்திடமிருந்து கோரியுள்ளது. இலங்கையிலுள்ள மாலைதீவுத் தூதரகத்தினூடாக மாலைதீவு அரசாங்கம் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளது.

132 மருத்துவர்களையும் 80 தாதியர்களையும் ஒரு வருட கால ஒப்பந்தத்தில் தனது நாட்டுக்கு அனுப்பி வைக்குமாறு மாலைதீவு அரசாங்கம் கேட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சின் தெற்காசிய மற்றும் சார்க் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் வத்சலா அமரசிங்க சுகாதார அமைச்சுக்கு அறிவித்துள்ளார்.

இதற்கமைய 20 விஷேட வைத்திய நிபுணர்கள், 20 மருத்துவ அதிகாரிகள், 15 மயக்க மருந்து வைத்திய அதிகாரிகள் உள்ளிட்ட 132 பேரையும் 80 பயிற்றப்பட்ட தாதிகளையும் தனது நாட்டில் நிலவும் வெற்றிடங்களை நிரப்புவதற்காக மாலைதீவு அரசாங்கம் கோரியுள்ளது.

About the author

Administrator

Leave a Comment