கோப் குழுவில் மீண்டும் ஹக்கீம்

12

கடந்த பெப்ரவரி 05 ஆம் திகதி நியமிக்கப்பட்ட பொது முயற்சியாண்மைக்கான தெரிவுக்குழு (கோப்) மற்றும் அரச கணக்குகளுக்கான தெரிவுக்குழு (கோபா) பாராளுமன்றம் கலைக்கப்பட்டபோது கலைக்கப்படடிருந்த நிலையில் இவற்றுக்கான புதிய அங்கத்தவர்கள் புதிய பாராளுமன்ற உறுப்பினர்களில் இருந்து தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இந்த இரு குழுக்களுக்கும் 22 பாராளுமன்ற உறுப்பினர்கள் வீதம் தெரிவாகியுள்ளனர்.

கோப் குழுவின் முன்னாள் உறுப்பினர் ரவூப் ஹக்கீம் உட்பட 22 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். ஏனைய அங்கத்தவர்களாக மஹிந்த அமரவீர, மஹிந்தானந்த மளுத்கமகே, ரோஹித அபேகுணவர்தன, சுசில் பிரேம்ஜயந்த, ஜயந்த சமரவீர, திலும் அமுனுகம், இந்திக்க அனுருத்த, சரத் வீரசேகர, டிவி சானக்க, கலாநிதி நாலக்க கொடஹேவா, அஜித் நிவாட் கப்ரால், அநுரகுமார திசாநாயக்க, பாட்டலி சம்பிக்க ரணவக்க, ஜகத் புஷ்பகுமார, இரான் விக்ரமரத்ன, ரஞ்சன் ராமநாயக்க, நலின் பண்டார, எஸ்.எம்.மரிக்கார், பிரேமநாத் சீ தொலவத்த, ராசமாணிக்கம் சாணக்கியன், சரித்த ஹேரத் ஆகியோர் அடங்குகின்றனர்.

அரச கணக்குகளுக்கான தெரிவுக்குழு (கோபா) உறுப்பினர்களாக, உதய கம்மன்பில

துமிந்த திஸாநாயக்க, தயாசிறி ஜயசேகர, லசந்த அளகியவன்ன, சுதர்ஷினி பெனாண்டோபுள்ளே, ஷெஹான் சேமசிங்க, பிரசன்ன ரணவீர, திஸ்ஸ அத்தநாயக்க, திஸ்ஸ விதாரண, ஹரின் பெனாண்டோ, நிரோஷன் பெரேரா, பைஸல் காசிம், அசோக அபேசிங்க, புத்திக பத்திரண, காதர் மஸ்தான், சிவஞானம் சிறீதரன், உபுல் கலப்பத்தி, பீ.வை.ஜீ. ரத்னசேகர, வீரசுமண வீரசிங்க, ரஞ்சித் பண்டார, மொஹமட் முஸம்மில், ஹரினி அமரசூரிய ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.