20 ஆம் திருத்தத்தை ஆராய சட்டத்தரணிகள் சங்கக் குழு நியமனம்

23

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் நிறைவேற்றுக் குழுவும் சட்டத்தரணிகள் கவுன்ஸிலும் உரிய தீரமானத்துக்கு வரும் வகையில் உத்தேச 20 ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பில் ஆராய்ந்து தமது அவதானங்களை முன்வைப்பதற்கான குழுவொன்றை இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் நியமித்துள்ளது.

ஜனாதிபதி சட்டத்தரணி நிஹால் ஜயமான்ன தலைமையிலான இந்தக் குழுவில் ஜனாதிபதி சட்டத்தரணிகளான இக்ராம் மொஹமட், எம்.எம்.ஸுஹைர், எல்.எம்.கே. அருளானந்தம், பிரசாந்த லால் டி அல்விஸ், நிஹால் ஜயவர்தன, நளின் லட்டுவஹெட்டி, மைத்திரி விக்கிரமசிங்க, உதித எகலஹேவா, அநுர மெத்தேகொட, மொஹான் வீரகோன், எஸ்டி ஜயநாகா, பிரியலால் விஜேவீர, மவுரபாத குணவங்ச, ரவி அல்கம ஆகியோரும் ஒருங்கிணைப்பாளராக சாந்த ஜயவர்தனயும் நியமிக்கப்பட்டுள்ளனர்.