மூன்று பல்கலைக்கழகங்களுக்கான அங்கீகாரத்தை நீக்குவது பற்றி ரஷ்யா கவலை

18

ரஷ்யாவின் மூன்று பல்கலைக்கழகங்களை முன்னறிவிப்பின்றி நீக்க இலங்கை மருத்துவ சபை எடுத்த தீர்மானம் தொடர்பாக கவனம் செலுத்தியுள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

Patrice Lumumba University எனப்படும் The People’s Friendship University of Russia பல்கலைக்கழகம், Pirogov Russian National Research University மற்றும் Tver State Medical University ஆகியன அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழக பட்டியலில் இருந்து நீக்கப்படன.

கடந்த ஆண்டுகளில் அடிக்கடி இலங்கைக்கு வந்த குறித்த ரஷ்ய பல்கலைக்கழகங்களின் அதிகாரிகள் இலங்கை மருத்துவ சபையுடன் சந்திப்புகளை நடத்தியதாகவும் இலங்கை மருத்துவ சபைக்கு செலுத்த வேண்டிய கட்டணத்தை தவறாது செலுத்தியதாகவும் கொழும்பில் ரஷ்ய தூதரகம் தெரிவித்துள்ளது.

இராஜதந்திர தொடர்புகளைக் கொண்ட 60 வருடகால வரலாற்றில் ரஷ்யா பலவிதமான புலமைப்பரிசில்களை இலங்கைக்கு வழங்கியுள்ளதுடன், அதனூடாக மருத்துவ நிபுணர்கள் பலர் உருவானதாக ரஷ்ய தூதுவராலயத்தின் கலாசார பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த தீர்மானத்தினால் ரஷ்ய அரசாங்கத்தால் இலங்கைக்கு வழங்கப்படும் இதுபோன்ற சிறப்புரிமைகள் இழக்கப்பட்டு, நாட்டின் இளைஞர் சமுதாயத்திற்கான வாய்ப்புகளைத் தவறவிட இடமளிக்கமாட்டார்கள் என நம்புவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.