எஸ். முத்துமீரனுக்கு கொடகே வாழ்நாள் சாதனை விருது

14

22 வதுகொடகே தேசியச் சாகித்திய விருது விழா- 2020 செப்டம்பர் 10-ஆம் (இன்று) திகதி வியாழக்கிழமை பி. ப. 3.00 மணிக்கு, கொழும்பு – 07, இலங்கை மன்றக் கல்லூரி கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இவ்விழாவில் பேராசிரியர் சந்திரசிறி பள்ளியகுரு, பேராசிரியர் சுனந்த மஹேந்திர, எழுத்தாளர் எஸ். முத்துமீரன் ஆகியோருக்கு சிங்களம், ஆங்கிலம், தமிழ் மொழியிலான இலக்கிய வளர்ச்சிக்குச் செய்த பங்களிப்பைக் கௌரவிக்கும் முகமாகக் கொடகே வாழ்நாள் சாதனை விருதுகள் வழங்கப்பட்டன.

மேலும் 2019 ஆண்டு சிங்களம், தமிழ் ஆங்கிலம் மொழிகளில் வெளிவந்த நூல்களில் சிறந்த நூல்களுக்குக் கொடகே தேசியச் சாகித்திய விருதுகள் வழங்கப்பட்டன. தமிழில் சிறந்த நாவலாக மலரன்பனின் பால் வனங்களில்’ தெரிவுச் செய்யப்பட்டது. சிறந்த சிறுகதைத் தொகுப்பாக க.கோபாலபிள்ளையின் ‘அசை’ தெரிவுச் செய்யபபட்டது. சிறந்த கவிதைத் தொகுப்புகளாக சித்தி றபீக்கா பாயிஸின் ‘வற்றாத ஈரம்’ மற்றும் மு., லெ.அச்சிமுகமட்டின், ”எனது நிலமும் நிலவும’; ஆகிய தொகுப்புகள்; தெரிவுச் செய்யபபட்டன. சிறந்த முதல் நூலாக ஷியாவின் ‘வலித்திடினும் சலிக்கவில்லை’ தெரிவுச் செய்யப்பட்டது.

சிங்கள-தமிழ் நிகழ்ச்சி தொகுப்பினை ஹேமசந்திர பதிரனயும், சிங்கள மொழியிலான வரவேற்புரையை அனுர- ஹெட்டிகேயும், தமிழ் மொழியிலான வரவேற்புரையையும் நூல் தெரிவு அறிவிப்புகளையும் மேமன்கவியும் நிகழ்த்தினார்கள்.