பாடசாலை அதிபர்களுக்கு ஜனாதிபதியின் அறிவுறுத்தல்.

16

2020ம் ஆண்டு தரம் -01 இற்கு புதிதாக மாணவர்களை சேர்ப்பதற்காக வேண்டி ஜனாதிபதி, பிரதமர், உயர் அதிகாரிகளது பெயர் குறிப்பிட்டுவரும் வேண்டுகோள் கடிதங்களை நிராகரிக்குமாறு ஜனாதிபதியின் செயலாளர் P.B. ஜயசுந்தர அவர்களினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வறிக்கையில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ஒழுங்கிற்கேற்ப மாணவர்களை உள்வாங்குமாறும் இதனை மீறும் அதிபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.