வடக்கு மக்களைக் குடியேற்ற 409 வீடுகளை அமைக்க ஜனாதிபதி உத்தரவு

0
1

வடக்கு மாகாணத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு நலன்புரி முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கு வீடுகளை அமைத்துக் கொடுக்குமாறு ஜனாதிபதி பணித்துள்ளார்.

வட மாகாணத்தின் 22 நலன்புரி முகாம்களில் உள்ள 409 குடும்பங்களுக்கு வீடுகளை நிர்மாணித்துக் கொடுத்து அவர்கள் மீள்குடியேறுவதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதி நேற்று உத்தரவிட்டார். கிராமிய வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கட்டடப் பொருட்கள் தொழில் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சின் எதிர்காலச் செயற்பாடுகள் பற்றி நேற்று ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலிலேயே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

வடக்கு யுத்தத்தின் போது பிரிவினைக்கு ஆதரவளிக்காததன் காரணமாக 1990 இல் 72,000 முஸ்லிம்கள் வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்டு இன்றும் இடம் பெயர்ந்து வாழ்கிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here