தாம் வாழும் பிரதேசங்களில் வாக்காளர் பதிவுக்கு புத்தளம் இடம்பெயர்ந்தோருக்கு இடமளிக்க வேண்டும்

0
4

தாம் விரும்பும் பிரதேசங்களில் வாழ முடியும் என்றிருக்கும் போது புத்தளத்தில் இடம் பெயர்ந்து வாழ்பவர்களுக்கும் அவர்கள் விரும்பும் பிரதேசங்களில் சட்டத்துக்கமைவாக வாக்காளர் பதிவுகளை மேற்கொள்ள இடமளிப்பது அரச அதிகாரிகளின் கடமை என புத்தளம் அரசாங்க அதிபர் சந்திரசிரி பண்டார தெரிவித்தார்.

புத்தளம் மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவர்களான வடமேல் மாகாண ஆளுநர் ராஜா கொல்லுரே, புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அசோக பிரியந்த ஆகியோரின் தலைமையில் நேற்று (18) நடைபெற்ற புத்தளம் மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

வடக்கிலிருந்து இடம் பெயர்ந்து புத்தளத்தில் வாழும் மக்களின் வாக்காளர் பதிவுகளை புத்தளம் மாவட்டத்தில் மேற்கொள்ள வேண்டாம் என ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிந்தக அமல் மாயாதுன்ன முன்வைத்த யோசனைக்கு எதிர்ப்புத் தெரிவித்த புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமின் கருத்துக்கு ஆதரவளித்துப் பேசும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here