09 அல்கொய்தா தீவிரவாதிகள் இந்தியாவில் கைது

0
2

இந்திய தேசிய புலனாய்வுப் பிரிவுக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் கேரளா மாநிலத்தில் எர்ணா குளத்திலும் மேற்கு வங்க மாநிலத்தின் முர்ஷிதாபாத்திலும் மேற்கொள்ளப்பட்ட தேடுதல்களின் போது 09 அல்கொய்தா தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர் என தேசிய புலனாய்வுப் பிரிவு (என்ஐஏ) அறிவித்துள்ளது.

இவர்கள் அனைவரும் பாகிஸ்தானைத் தளமாகக் கொண்டவர்கள் என்றும், இந்தியாவின் முக்கிய இடங்களில் தாக்குதல் நடத்துவதற்கு இவர்கள் திட்டமிட்டிருந்தார்கள் என்றும் என்ஐஏ அறிவித்துள்ளது.

கைது செய்யப்பட்ட 09 பேரும் அல்கொய்தா அமைப்பைச் சேர்ந்தவர்கள். இவர்களிடமிருந்து டிஜிட்டல் உபகரணங்கள், ஆவணங்கள், கூர்மையான ஆயுதங்கள், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கிகள், உடல் கவசம் உள்ளிட்ட பல பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக இந்திய தேசிய புலனாய்வுப் பிரிவு அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here