தளர்ந்து விட வேண்டாம், ஆபத்து இன்னும் நீங்கவில்லை

0
3

கொவிட் 19 க்கு எதிரான தமது பாதுகாப்புக் கவசங்களை களைந்து விட வேண்டாம் என கொவிட் 19 பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான தேசிய நடவடிக்கைகள் நிலையம் (NOCPCO) பொதுமக்களைக் கேட்டுள்ளது.

இது தொடர்பில் நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  சமூகத்திலிருந்து யாரும் கொவிட் 19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்படவில்லை என்பது உண்மைதான். ஆனாலும் தனிமைப்படுத்தலில் இருக்கும் போது மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளில் உறுதி செய்யப்பட்ட தொற்றாளர்கள் இன்னும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்பதை மறக்க வேண்டாம் என நிலையத்தின் தலைவர் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

வைபவங்களை ஏற்பாடு செய்பவர்கள் அதற்கான உரிய அனுமதியைப் பெற்று நடத்திய போதும் அவர்கள் சுகாதார வழிமுறைகளை இறுக்கமாக நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here