தாக்குதலை பொறுப்பேற்பவருக்கு தூதுவர் பதவி வழங்குவதாக சிரிசேன வாக்குறுதி

0
6

ஈஸ்டர் தாக்குதலுக்கான பொறுப்பை ஏற்றுக் கொண்டால் தனக்கு பல சலுகைகளை வழங்குவதாக ஜனாதிபதி சிரிசேன தெரிவித்தார் என ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் நேற்று முன்தினம் சாட்சியமளித்த முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிரி பெர்ணான்டோ தெரிவித்தார்.

ஏப்ரல் 21 ஆம் திகதிய தாக்குதலுக்கான பொறுப்பை ஏற்றுக் கொண்டு பதவியில் இருந்து விலகினால் முன்னாள் பொலிஸ் மாஅதிபருக்கு ஓய்வூதியத்துக்கான ஏற்பாடுகளைச் செய்து தருவதாகவும், அவர் விரும்பும் எந்த நாட்டிலும் அவரைத் தூதுவராக நியமிப்பதாகவும் முன்னாள் ஜனாதிபதி சிரிசேன ஏப்ரல் 24 ஆம் திகதியன்று தெரிவித்தார் என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிரி பெர்ணான்டோ ஆணைக்குழு முன்னிலையில் தெரிவித்தார். உயர்நீதிமன்ற நீதிபதி விஜித் மலல்கொட தலைமையில் விசாரணை மேற்கொண்டிருந்த பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பிலான விசாரணைக் குழுவிலிருந்து அவரை விடுவிப்பதாகவும் ஜனாதிபதி சிரிசேன தெரிவித்ததாகவும் அவர் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் ஆலோசனை பெறுவதற்கு தன்னை நாடியதாகவும் இது ஒரு பாரதூரமான விடயம் என்பதால் அவரது குடும்ப அங்கத்தவர்களை ஆலோசிக்குமாறு தான் அவருக்குக் கூறியதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here