நீர்கொழும்பில் மட்டும் 6 பேருக்கு கொரோனா

0
36

நாட்டின் பல பகுதிகளிலும் கொரோனா நோயாளர்கள் அதிகரித்து வரும் நிலையில், இதுவரையில் நீர்கொழும்பில் மட்டும் மொத்தம் 6 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

நேற்றைய தினம் (08) நீர்கொழும்பு சாந்த ஜோசப் வீதியில் அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளியின் மகன் நீர்கொழும்பில் உள்ள பிரபல பீட்சா உணவகம் ஒன்றில் பணியாற்றுவதால் குறித்த பீட்சா உணவகம் மூடப்பட்டு அங்கு பணியாற்றிய அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டனர்.

இன்று (09), நீர்கொழும்பு பழைய சிலாப வீதியில் ஆவேமரியா மாவத்தையில் அமைந்துள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக வந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானதில், அந்த வைத்தியசாலை மூடப்பட்டு, அங்கிருந்த அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

நீர்கொழும்பின் பிட்டிபனை, முன்னக்கரை, தலாதுவ, தில்லந்துவ, கட்டுவாப்பிட்டிய, பல்லன்சேன ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்களே இதுவரை இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளனர்.