இரண்டாவது-தவணையும்-நிறைவ

27

இலங்கை ஜனநாயக சோஷலிஸக் குடியரசின் இரண்டாவது குடியரசு யாப்புக்குப் பகரமாக புதிய அரசியல் யாப்பொன்றை உருவாக்குவதற்காக பொதுமக்களின் கருத்துக்களை நீதியமைச்சு கோரியுள்ளது.

பொதுமக்கள் தமது கருத்துக்களை தமிழ், சிங்களம், ஆங்கிலம் எந்த மொழியிலும் நவம்பர் 30 ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்க முடியும்.

கருத்துத் தெரிவிப்பதறகான பரப்புகளும் புதிய யாப்பு உருவாக்கத்துக்கென அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழுவினால் தரப்பட்டுள்ளன. அரசின் தன்மை, அடிப்படை உரிமைகள், மொழி, அரச கொள்கைகளை வழிநடத்துவதற்கான அடிப்படைகள், நிறைவேற்றதிகாரம், தேர்தல் மற்றும் சர்வஜன வாக்கெடுப்பு, அதிகாரப் பகிர்வும் அதிகாரப் பரவலாக்கமும், நீதித் துறை, பொது நிதி, பொதுப் பாதுகாப்பு மற்றும் இவை தவிர்ந்த வேறெதுவும் தொடர்பிலும் கருத்துக்களை முன்வைக்க முடியும்.