மதச் சுதந்திரம், மனித உரிமை தொடர்பில் பொம்பேயோ கலந்துரையாடுவார்

0
42

அமெரிக்க வெளியுறவுத் துறைச் செயலாளர் மைக் பொம்பேயோவின் இலங்கை விஜயத்தின் போது பொருளாதார அபிவிருத்திக்காக அமெரிக்காவுடன் இணைந்து செயற்படுவது தொடர்பிலான தெரிவினை இலங்கைக்கு முன்வைப்பார் என பிரதி உதவிச் செயலாளர் டீன் தொம்சன் தெரிவித்தார்.

  1. இலங்கையுடனான எமது நீண்டகால பங்குடைமையை வலுப்படுத்துவதற்கும் பிராந்தியத்துடனான எமது நீண்ட கால உறுதிப்பாட்டை மீள உறுதிப்படுத்துவதற்கும் பாரபட்சமான மூடிய நடைமுறைகளுக்கு மாற்றமாக வெளிப்படையானதும் நிலையானதுமான பொருளாதார மேம்பாட்டுக்கும் நாங்கள் முன்வைக்கும் தெரிவுகளை  இலங்கை மீளாய்வு செய்ய வேண்டும் என நாங்கள் இலங்கையை ஊக்குவிக்கிறோம் என அவர் கூறியதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

முன்னதாக இலங்கைப் பத்திரிகையொன்றுக்கு அமெரிக்கத் தூதுவர் வழங்கிய பேட்டியின் போது சீனா நாடுகளுடனான உறவின் போது வெளிப்படையாக நடந்து கொள்ள வேண்டும் எனத் தெரிவித்திருந்தார்.

நீண்டகாலச் செழிப்பை நோக்கிய தனது பொருளாதாரச் சுதந்திரத்தைப் பெறுவதற்காக இலங்கை கடினமான ஆனால் அவசியமான முடிவுகளை எடுக்குமாறு  நாம் வேண்டிக் கொள்கிறோம் எனவும் அவர் கூறியுள்ளார். பிராந்திய கடல்சார் ஒத்துழைப்பு, ஜனநாயகம், மனித உரிமை, மதச் சுதந்திரம், நீதி போன்ற விடயங்களில் அவர் இலங்கையுடன் கலந்துரையாடுவார் என  டீன் தொம்சன் தெரிவித்தார்.

திரு. பாம்பியோ இலங்கையில் தனது பயணத்தின் போது ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்தன ஆகியோரைச் சந்திக்க உள்ளார்.